வியட்நாம் நாட்டின் புதிய அதிபராக பாதுகாப்பு காவல்துறை உயரதிகாரி பதவியேற்பு
vietnam
வியட்நாம் நாட்டின் புதிய அதிபராக அந்நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பு காவல்துறை உயரதிகாரி டிரான் டாய் குவாங் பதவியேற்றுள்ளார். வியட்நாம் பாராளுமன்றத்திற்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஆளுங்கட்சியின் அதிருப்தியை போக்கவே புதிய அதிபர் பதவியேற்றுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது சீனாவுக்கு வியட்நாமுக்கும் இடையேயான உறவு மிகவும் பலவீனமாக உள்ளதாகவும், இதனால் தற்போதைய அதிபருக்கு பதிலாக வேறு அதிபரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை ஆளுங்கட்சியில் வலியுறுத்தப்பட்டதால் புதிய அதிபராக 59 வயது டிரான் டாய் குவாங்9) என்பவரை ஆளும்கட்சியின் உயர்மட்ட பொதுக்குழு தேர்வு செய்துள்ளது.

இந்நிலையில் அந்நாட்டு பாராளுமன்றத்தில் இன்று புதிய அதிபரை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 465 உறுப்பினர்களில் 460 பேர் டிரான் டாய் குவாங்-ஐ  ஆதரித்து வாக்களித்தனர். இதையடுத்து அவர் வியட்நாமின் புதிய அதிபராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

அமெரிக்க அதிபர் ஒபாமா வரும் மே மாதம் வியட்நாம் நாட்டுக்கு வருகை தரவுள்ளார். அப்போது, அவரை சந்திக்கும் புதிய அதிபர் டிரான் டாய் குவாங், இருநாடுகளுக்கு இடையில் நீண்டகாலமாக நிலவிவரும் பல்வேறு பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பார் என கூறப்படுகிறது.

Chennai Today News: Vietnam parliament swears in top policeman as president

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *