பிகினி உடைகளுடன் பணிப்பெண்களுடன் ஏர்லைன்ஸ்: இந்தியாவில் அறிமுகம்

பொதுவாக விமான நிறுவங்களில் பணிபுரியும் பணிப்பெண்கள் நாகரீகமான உடையணிந்து வரும் நிலையில் பிகினி உடையுடன் பணிபெண்களை கொண்டு நடத்தி வரும் வியெட்ஜெட் ஏர்லைன்ஸ் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது

வியட்நாம் நாட்டை சேர்ந்த இந்த ஏர்லன்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து பெண்களும் டூபீஸ் உடையில் தான் இருப்பார்கள். இதனால் ஆண் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தாலும் பெண் பயணிகள் தங்கள் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த விமான நிறுவனம் வியட்நாம் தலைநகர் ஹனோயில் இருந்து இந்தியாவின் தலைநகர் புதுடெல்லிக்கு நேரடி விமானம் ஒன்றை இயக்கவுள்ளாதாம். இந்த விமானத்திலும் பிகினி பணிப்பெண்களை பயன்படுத்த இந்நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இந்திய கலாச்சாரத்திற்கு இது உகந்தது அல்ல என சில அமைப்புகள் போர்க்கொடி தூக்க தயாராக உள்ளது

Vietnam bikini airline is coming to India

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *