ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு படத்தில் வித்யாபாலன்

சில்க்ஸ்மிதா வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து தேசிய விருது பெற்ற நடிகை வித்யாபாலன், தற்போது ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு படத்திலும் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது

இந்த தகவலை பாலிவுட் இயக்குனர் ஹன்சல் மேத்தா தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியபோது, ‘இன்னொரு ஸ்ரீதேவி இல்லவே இல்லை. என் படத்தில் ஸ்ரீதேவியை நடிக்க வைக்க நினைத்தபோது அவர் இறந்துவிட்டார். அதற்கு பதிலாக அவருடைய வாழ்க்கை வரலாறு படத்தை இயக்கவுள்ளேன். இந்த படத்தை நான் ஸ்ரீதேவிக்கு டெடிகேட் செய்வேன் என்று ஹன்சல் மேத்தா தெரிவித்துள்ளார்.

இந்த படம் குறித்த அறிவிப்பு மிகவிரைவில் வெளியாகிறது. இந்த படத்திற்கு ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூரிடம் அனுமதி பெற்றது குறித்த தகவல் இதுவரை இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *