3தேசியவிருது பெற்ற நடிகை வித்யாபாலனின் திருமண வாழ்க்கையில் புயல் வீசியுள்ளதாக பாலிவுட்டில் பெரும் பரபரப்பாக செய்தி வெளிவந்துள்ளது. பிரபல தொழில் அதிபரும்,  Walt Disney Company India நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டருமான சித்தார்த் ரே அவர்களை கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வித்யாபாலன் திருமணம் செய்தார்.

திருமணம் ஆனதில் இருந்து இருவரும் அவரவர் துறையில் பிசியாக இருந்ததால், இருவருக்கும் இடையே புரிந்து கொள்ளுதல் சரியாக இல்லை என்றும் கூறப்பட்டது. மேலும் வித்யாபாலன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், இன்னும் இரண்டு வருடங்களுக்கு குழந்தை பெற்றுக்கொள்ளும் எண்ணம் இல்லை என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் வித்யாபாலன் தனது வெளிநாட்டு சுற்றுப்பயண நிகழ்ச்சிகள் அனைத்தையும் திடீரென ரத்து செய்தார். வித்யாபாலனின் கணவருக்கும் புதிதாக அவர் அறிமுகப்படுத்திய ஒரு நடிகைக்கும் நெருக்கம் மிக அதிகமானதால் இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் விரைவில் இருவரும் விவாகரத்து செய்யவிருப்பதாகவும் பாலிவுட் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.

வித்யாபாலனின் கணவர் சித்தார்த் ரே ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து பெற்றவர். அவரது மூன்றாவது மனைவிதான் வித்யாபாலன். வித்யாபாலனையும் விவாகரத்து செய்துவிட்டு, அறிமுக நடிகையுடன் அவர் விரைவில் திருமணம் செய்துகொள்வார் என்று கூறப்படுகிறது.

ஆனால் வித்பாலனிடம் இதுகுறித்து செய்தியாளர்களிடம் கேட்டபோது, ‘தனக்கு உடல்நிலை சரியில்லாததால்தான் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை ரத்து செய்ததாகவும், தனக்கும் தனது கணவருக்கும் எவ்வித பிரச்சனையும் இல்லை என்றும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *