shadow

ajith and vidyaஅஜீத் தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் நடித்துக்கொண்டிருக்கும் படத்தை முடித்துவிட்டு, மீண்டும் வீரம் இயக்குனர் சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். அந்த படத்தின் திரைக்கதை அமைக்கும் வேலையில் மிக தீவிரமாக ஈடுபட்டுள்ளார் சிறுத்தை சிவா.

சிறுத்தை சிவா நேற்று தனது டுவிட்டர் தளத்தில், தல படத்தின் திரைக்கதை அமைக்கும் பணியில் மிகவும் பிசியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி இந்த படத்தில் அஜீத்துடன் ஜோடியாக நடிக்க பாலிவுட்டின் முன்னணி நடிகையிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சிறுத்தை சிவாவின் உதவியாளர்களிடம் விசாரித்த போது, அந்த பாலிவுட் முன்னணி நடிகை வித்யாபாலன் என தெரிய வந்துள்ளது. வித்யாபாலனிடம் சிறுத்தை சிவா, தனது படத்தில் நடிக்க அணுகியவுடன், அவர் ஸ்ரீதேவியிடம் கருத்து கேட்டதாகவும், ஸ்ரீதேவி அஜீத் குறித்து பாசிட்டிவ்வான கருத்து கூறியதால், வித்யாபாலன் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தி டர்ட்டி பிக்சர்ஸ், கஹானி திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் புகழ் பெற்றிருந்த வித்யாபாலன் அஜீத் படத்தில் நடிக்க இருப்பதால் இந்த படத்திற்கு இப்பொழுதே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply