vidhyabalanமாமனார் ரஜினிக்கும், மருமகன் தனுஷுக்கும் ஒரே நேரத்தில் ஜோடியாக வித்யாபாலன் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதற்கு முன்னர் நடிகர் ஸ்ரேயா கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் சிவாஜி படத்தில் ரஜினிக்கும், திருவிளையாடல் ஆரம்பம்’ என்ற படத்தில் தனுஷுக்கும் ஜோடியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினிக்கும் தனுஷுக்கும் ஜோடியாக வித்யாபாலன் நடிக்கவுள்ளாரா? என்பது குறித்து ரஜினி பட இயக்குனர் பா.ரஞ்சித் தரப்பினர் கூறும்போது ரஜினிக்கு ஜோடியாக நடிக்க பல நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இன்னும் யாரையும் முடிவு செய்யவில்லை என்று கூறினர்.

அதே நேரத்தில் தனுஷுக்கு ஜோடியாக வித்யாபாலன் நடிப்பது குறித்தும் அதிகாரபூர்வமான தகவல்கள் எதுவும் இல்லை. இப்போதைக்கு தனுஷ் வேலையில்லா பட்டதாரி 2″ படத்தில் பிசியாக இருக்கின்றார். இதையடுத்து பிரபுசாலமன் படம், அதற்கு பின்னர்தான் இந்திப்படம் என்ற பிளானில் தனுஷ் இருப்பதாக கூறப்படுகிறது.

எனவே தேசிய விருது பெற்ற தனுஷும் வித்யாபாலனும் இணைவார்களா? என்பதை அடுத்த வருடம் வரை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *