ஹாலிவுட் தரத்தில் வித்யாபாலன் நடிக்கும் இந்திரா காந்த் வாழ்க்கை வரலாறு படம்.

indhira gandhi‘தி டர்டி பிக்சர்ஸ்’, ‘கஹானி’ ஆகிய படங்கள் மூலம் பிரபலமான நடிகை வித்யாபாலன், முன்னாள் இந்திய பிரதமர் இந்திராகாந்தி வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படம் ஒன்றில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்திராகாந்தியின் வாழ்க்கை வரலாற்றை இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் பிரமாண்டமாக படமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஹாலிவுட் இயக்குனர் இயக்கிய ‘காந்தி’ படம் போன்று இந்த படமும் உலக அளவில் பேசப்பட வேண்டும் என்ற நோக்கில் படமெடுக்கவுள்ளதாகவும், இந்த படத்திற்காக வித்யாபாலன் தொடர்ந்து இரண்டு வருடங்கள் கால்ஷீட் கொடுக்க சம்மதித்துள்ளதாகவும், அதற்காக அவருக்கு ரூ.18 கோடி சம்பளம் பேசபட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தின் பெரும்பாலான டெக்னீஷியன்கள் ஹாலிவுட்டில் இருந்து வரவுள்ளதாகவும், இந்த படம் இந்திய திரையுலகில் ஒரு மைல்கல்லாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிக்கக்கூடிய மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் விரைவில் இதுகுறித்து அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறபடுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *