shadow

shadow

கடந்த சில வருடங்களாக ஆப்கானிஸ்தானில் முகாமிட்டிருந்த நேட்டோ படைகள் அனைத்தும் வாபஸ் பெற்றுவிட்ட நிலையில் இன்று காலை அதிரடியாக ஒரு மர்ம விமானம் ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான்கள் முகாம் என சந்தேகிக்கக்கூடும் ஒரு இடத்தில் திடீரென வந்து குண்டுமழை பெய்தது. இந்த அதிர்ச்சி காட்சியை அமெரிக்க கடற்படையை சேர்ந்த ஒரு வீரர் வீடியோ படம் எடுத்து இணையதளத்தில் உலவ விட்டுள்ளார்.

[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”//bit.ly/1s7sQd0″ standard=”//www.youtube.com/v/LrKxT6KuFkY?fs=1″ vars=”ytid=LrKxT6KuFkY&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep9975″ /]

இந்த அதிர்ச்சி வீடியோ தற்போது இணையத்திலும், சமூக வலைத்தளங்களிலும் அதிர்ச்சியுடன் பகிரப்பட்டு வருகிறது. இந்த மர்ம விமானம் அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமானது போல் தெரிந்தாலும், அது உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்த எதிர்பாராத அதிரடி தாக்குதலால் தலிபான்கள் நிலைகுலைந்துள்ளனர் என்று ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. தலிபான்களின் 9/11 தாக்குத­­­­­­லுக்கான பழிவாங்கலா? என்பது குறித்து இணையத்தில் கருத்துக்கள் பரிமாறப்பட்டு வருகின்றன

14

Leave a Reply