shadow

பெருமாள் முன் அனைவரும் சமம்: வரிசையில் நின்று தரிசனம் செய்த துணை குடியரசு தலைவர்

துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு திருப்பதியில் சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று வந்தார். அவர் பத்மாவதி விருந்தினர் மாளிகையில் ஓய்வு எடுத்தார்.

ஏழுமலையான் கோவிலில் நேற்று காலை சாமி தரிசனம் செய்தார். தரிசனத்திற்கு பிறகு தேவஸ்தான அதிகாரிகள் ஆலய அர்ச்சகர்கள் அவருக்கு தீர்த்த பிரசாதங்களை வழங்கினர்.

வி.ஐ.பி.க்கள் வரும்போது பாதுகாப்பு கருதி அவர்களை மகாதுவாரம் வழியாக சுவாமி தரிசனம் செய்ய வழியனுப்பி வைப்பார்கள். ஆனால், துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு பொதுமக்கள் சர்வ தரிசனம் செய்யும் வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸ் வழியாக நடந்து வந்து திருப்பதி பெருமாளை தரிசித்தார்.

விஐபி ஒருவர் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் வழியாக வந்து சாமியை தரிசித்தது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

இதுகுறித்து அவர் கூறுகையில், துணை ஜனாதிபதி பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ளதால் ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தேன். முக்கிய பிரமுகர்கள் யாராக இருந்தாலும் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே இங்கு சாமி தரிசனம் செய்ய வேண்டும். அப்போது தான் மற்றவர்கள் சாமி தரிசனம் செய்ய முடியும் என தெரிவித்தார்.

Leave a Reply