கருணாநிதிக்காக சென்னை வருகிறார் துணை ஜனாதிபதி:
திமுக தலைவர் கருணாநிதி சென்னை காவேரி மருத்துவமனையில் உடல்நலமின்றி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதை அடுத்து அவரை அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் பார்க்க மருத்துவமனைக்குக் வந்து கொண்டிருக்கின்றனர்.
அந்த வகையில் இன்று சென்னை வருகிறார் துணை ஜனாதிபதி வெங்கைய்யா நாயுடு .திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க அவர் சென்னை வருவதாகவும், இன்று காலை 11 மணிக்கு அவர் காவேரி மருத்துவமனைக்கு வருவார் என்றும் செய்திகள் கூறுகின்றன.
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அவர்களின் வருகையை முன்னிட்டு காவேரி மருத்துவமனை அருகே கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.