சூரி, சூர்யாவை தவிக்கவிட்ட வெற்றிமாறன், விஜய்யையும் தவிக்க விடுவாரா?

பிரபல இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும் அடுத்த படத்தில் சூரி கதாநாயகனாக நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்கும் என்றும் செய்திகள் வெளியானது

ஆனால் சூர்யா நடிக்கும் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததும், சூரி படத்தை கைவிட்ட வெற்றிமாறன், சூர்யா படத்தின் பணிகளை தொடங்கினார்

இந்த நிலையில் தற்போது திடீரென விஜய்யின் ‘தளபதி 65’ படத்தை இயக்கும் வாய்ப்பு வெற்றிமாறனுக்கு கிடைத்துள்ளதாகவும் இதனால் சூர்யா படத்தையும் தள்ளி வைத்துவிட்டு அவர் விஜய்யின் அடுத்த படத்தில் கவனம் செலுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் ஏற்கனவே ரஜினிக்கு கதை கூறியிருந்த வெற்றிமாறன், திடீரென ரஜினியிடமிருந்து அழைப்பு வந்தால் விஜய் படத்தையும் அவர் கை விடுவாரோ? என்ற கேள்வி எழுந்துள்ளது

Leave a Reply