shadow

dhanush and vetrimaranபொல்லாதவன், ஆடுகளம் ஆகிய இரண்டு படங்களில் இணைந்த தனுஷ் மற்றும் வெற்றிமாறன் மீண்டும் வரும் செப்டம்பர் மாதம் முதல் மூன்றாவது படத்தில் இணையவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

நேற்று நடைபெற்ற ‘காக்கா முட்டை’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இந்த தகவலை வெற்றிமாறனே செய்தியாளர்கள் முன்னர் தெரிவித்தார். இரண்டு படங்களில் தனுஷுடன் இணைந்து ஆறு தேசிய விருதுகளை பெற்ற வெற்றிமாறனுக்கு மீண்டும் தேசிய விருது காத்திருப்பதாக கோலிவுட்டில் கூறப்பட்டு வருகின்றது.

மேலும் நேற்று நடைபெற்ற காக்கா முட்டை’ இசை வெளியிட்டு விழாவில் பேசிய தனுஷ், ‘இந்த படத்தில் வெகு சிறப்பாக நடித்து தேசிய விருது பெற்ற குழந்தை நட்சத்திரங்களான விக்னேஷ் மற்றும் ரமேஷ் ஆகிய இருவரின் மேல்படிப்பு வரையிலான முழு செலவையும் தான் ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார்.

இந்த விழாவில் படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மாரி படத்தை முடித்துவிட்டு தற்போது வேலையில்லா பட்டதாரி 2″ படத்தில் தற்போது நடித்து கொண்டிருக்கின்றார். இந்த படத்தை முடித்துவிட்டு அவர் வெற்றிமாறனுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply