dhanush and lakshmiraiபொல்லாதவன், ஆடுகளம் ஆகிய இரண்டு படங்களில் இணைந்த தேசிய விருது பெற்ற நட்சத்திரங்களான வெற்றிமாறன் மற்றும் தனுஷ் ஆகியோர் மீண்டும் இணைய இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் ஒரு ஆடியோ விழாவில் பேசிய வெற்றிமாறன், தனுஷுடன் மீண்டும் இணைவது குறித்த பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும், அவருடன் இணையும் அடுத்த படத்திற்கு ‘சூதாடி” என்று பெயர் வைத்திருப்பதாகவும் கூறினார்.

“சூதாடி” திரைப்படத்தில் தனுஷுடன் ஜோடி சேர உள்ளவர் லட்சுமி ராய் என்றும், இருவருமே இந்த படத்தில் சூதாட்டத்திற்கு அடிமையாகி ஒருவருக்கொருவர் மோதிக்கொள்ளும் காட்சிகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. படத்தின் முழு திரைக்கதையும் தயாராக இருப்பதாகவும், தனுஷ் “அனேகன்” படத்தை முடித்தவுடன் சூதாடி திரைப்படத்தின் படப்பிடிப்புகள் ஆரம்பமாகும் என்றும் கூறப்படுகிறது. இந்த படம் குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளிவரும் என தெரிகிறது.

தனுஷ்- லட்சுமிராய் முதல்முறையாக ஜோடி சேரும் இந்த படத்தை தனுஷின் சொந்த நிறுவனமே தயாரிக்க இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *