ஏழு பேர் விடுதலைக்கான பேரணியில் திடீர் மாற்றம். அனுமதி மறுப்பால் பரபரப்பு

perarivalanபேரறிவாளன் கைது செய்யப்பட்டு இன்றுடன் 25 வருடங்கள் முடிவதால் வேலூர் சிறையில் இருந்து சென்னை கோட்டை வரை பிரமாண்ட பேரணி ஒன்றை நடத்த பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் அறிவித்திருந்தார். இந்த பேரணிக்கு தமிழக அரசு அனுமதி அளித்ததாக செய்திகள் வெளிவந்தன.

ஆனால் இந்த பேரணியில் எவ்வளவு வாகனங்கள் கலந்து கொள்ளும் எத்தனை பேர் கலந்து கொள்வார்கள் போன்ற விபரங்கள் இல்லாததால் அனுமதி வழங்க முடியாது என வேலூர் எஸ்.பி பகலவன் கூறியதால் பேரணியில் சிறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி வேலூரில் இருந்து பேரணி புறப்படுவதற்கு பதிலாக சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து சென்னை கோட்டை வரை பேரணி செல்லும் என்றும் பேரணியின் இறுதியில் முதல்வர் ஜெயலலிதாவிடம் அற்புதம்மாள் கோரிக்கை மனுவை கொடுப்பார் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது. சென்னையில் நடைபெறவுள்ள இந்த பேரணிக்கு சென்னை போலீஸ் கமிஷனர் அனுமதி அளித்துள்ளார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *