shadow

விக்ரம் வேதா’ தெலுங்கு ரீமேக்கில் வெங்கடேஷ்-ராணா

சமீபத்தில் வெளியாகி வெற்றி நடை போட்டு வரும் விஜய் சேதுபதி, மாதவன் நடித்த ‘விக்ரம் வேதா’ திரைப்படம் இந்தி மற்றும் தெலுங்கு மொழியில் ரீமேக் செய்யப்பட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தெலுங்கில் ரீமேக் செய்யப்படவுள்ள இந்த படத்தில் விஜய்சேதுபதி கேரக்டரில் வெங்கடேஷும், மாதவன் கேரக்டரில் ராணாவும் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த தகவலை படக்குழுவினர் உறுதி செய்யவில்லை.

இதுகுறித்து இந்த படத்தின் தயாரிப்பாளர் சசிகாந்த் கூறியபோது, ‘தெலுங்கு ரீமேக் குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருவது உண்மைதான். ஆனால் இன்னும் நடிகர்கள் மற்றும் இயக்குனர் இறுதி செய்யப்படவில்லை’ என்று கூறியுள்ளார். அதேபோல் இந்தி ரீமேக்கில் இந்த படத்தில் நடிக்க இரண்டு பிரபல நடிகர்கள் முன்வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply