shadow

வரலட்சுமியின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகை வரலட்சுமி தற்போது ஒரே நேரத்தில் சுமார் பத்து படங்களில் நடித்து வரும் நிலையில் அவர் நடித்து முடித்துள்ள படங்களில் ஒன்று ’வெல்வெட் நகரம்’. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் முடிவடைந்துவிட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த படம் மார்ச் 6ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது

வரலட்சுமி முக்கிய கேரக்டரில் நடித்துள்ள இந்த படத்தில் ரமேஷ் திலக், பிரகாஷ் ராகவன் உள்பட பலர் நடித்துள்ளனர். மனோஜ்குமார் நடராஜன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு அச்சு ராஜாமணி இசை அமைத்துள்ளார். பகத் குமார் ஒளிப்பதிவில் ரேமண்ட் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி உள்ளது

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் முதல் டீஸர் டிரெய்லர் என அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படம் வரலட்சுமியின் வெற்றி படங்களில் ஒன்றாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *