shadow

டெங்கு ஒழிப்பில் லஞ்சம்: கையும் களவுமாக பிடிப்பட்ட மாநகராட்சி கமிஷனர்

தமிழகம் முழுவதும் டெங்குவின் தாக்கம் அதிகம் இருப்பதால் டெங்குவை ஒழிக்க தமிழக அரசும், மாநகராட்சி அதிகாரிகளும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் டெங்கு கொசுக்களை ஒழிக்கும் பணிகளை மேற்கொண்டு வரும் காண்ட்ராக்டர் ஒருவரிடம் லஞ்சம் பெற்றதால் வேலூர் மாநகராட்சி கமிஷனர் கையும் களவுமாக பிடிபட்டு கைது செய்யப்பட்டார்.

காண்ட்ராக்டர் பாலாஜி என்பவரின் பில் பாஸ் ஆகவேண்டும் என்றால் ரூ.20000 லஞ்சம் வேண்டும் என்று கமிஷனர் குமார் கேட்டுள்ளார். இதுகுறித்து பாலாஜி, லஞ்ச ஒழிப்பு துறையினர்களிடம் தகவல் கொடுக்க அவர்களின் திட்டப்படி ரசாயனம் பூசப்பட்ட ரூபாய் நோட்டுக்களை பாலாஜி, கமிஷனர் குமாரிடம் கொடுத்தார்.

அந்த பணத்தை குமார் பெற்றபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலிசார் குமாரை மடக்கி பிடித்து கைது செய்தனர். இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply