shadow

vellaikara duraiஇளையதலைமுறை நடிகர்களில் அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்த நடிகர் என்ற பெருமைக்குரியவர் விக்ரம் பிரபு. இவர் நடித்து வெளியான கும்கி, இவன் வேற மாதிரி, அரிமா நம்பி, சிகரம் தொடு ஆகிய நான்கு திரைப்படங்களும் நல்ல வெற்றியை இவருக்கு பெற்றுக்கொடுத்தன.

இந்நிலையில் விக்ரம் பிரபு, தற்போது நடித்து வரும் திரைப்படம் ‘வெள்ளைக்கார துரை’. இதில் இவருக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்து வருகிறார். மேலும் சூரி, எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, வையாபுரி, ஆடுகளம் நரேன், சிங்கம்புலி, மதன்பாப், சிங்கமுத்து, நான் கடவுள் ராஜேந்திரன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து வருகின்றனர்.

விஜய்யின் துள்ளாத மனமும் துள்ளம் படத்தை இயக்கிய பிரபல இயக்குனர் எழில் இந்த படத்தை இயக்கி வருகிறார்.  டி.இமான் இசையமைக்கும் இப்படத்திற்கு சூரஜ்நல்லு சாமி ஒளிப்பதிவை செய்கிறார். முதல்முறையாக விக்ரம் பிரபு இந்த படத்தில் காமெடி ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

இப்படத்தின் டீசரை தீபாவளி அன்றும், இசையை அக்டோபர் 25-ம் தேதியும் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் இப்படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply