சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு எங்கே?

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் மோகன் ராஜா இயக்கி வந்த ‘வேலைக்காரன்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக சென்னையில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெறவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த தகவலை இயக்குனர் மோகன்ராஜா தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார்

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த ‘வேலைக்காரன்’ டைட்டிலை அடுத்து அவர் நடித்த ‘கபாலி’ படத்தின் லொகேஷனில் இந்த படம் உருவாகவிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. சேரியில் நடக்கும் ஒரு சமூக பிரச்சனையை கமர்சியலுடன் கலந்து மோகன்ராஜா இந்த படத்தை இயக்கி வருகிறார்.

சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத் பாசில், சினேகா, பிரகாஷ்ராஜ், ரோகினி, ஆர் ஜே பாலாஜி, சதீஷ், ரோபோ ஷங்கர் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை 24 ஏ.எம் ஸ்டுடியோஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது. சிவகார்த்திகேயனின் முந்தைய படமான ‘ரெமோ’ படத்திற்கு இசையமைத்த அனிருத் இந்த படத்திற்கும் இசையமைத்து வருகிறார்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *