ஒரே இடத்தில் 56 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து. 56 பேர் பலி

China Traffic Deathsசீனாவில் உள்ள பிசியான ஒரு சாலையில் ஒரே இடத்தில் 56 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்து காரணமாக இதுவரை சுமார் 17 பேர் பலியாகியுள்ளதாகவும் பலர் காயம் அடைந்துள்ளதாகவும் சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

24 மணி நேரமும் பிசியாக இருக்கும் சீனாவின் ஷான்க்ஸி மாகாணத்தில் உள்ள அதிவிரைவு நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை சுமார் 56 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 17 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 37 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும், காயம் அடைந்தவர்களில் சிலர் கவலைக்குள்ளாகி இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என்றும் அஞ்சப்படுகிறது. பெரிய, பெரிய லாரிகளும், கண்டெயினர்களும் இந்த விபத்தில் மோதியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

விபத்து நடந்த தகவல் அறிந்ததும் உடனடியாக மீட்பு குழுவினர் விரைந்து வந்து மீட்புப் பணிகளை துரிதமாக கவனித்து வருகின்றனர்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *