‘வேதாளம்’ ரிலீஸ் தேதி. நவம்பர் 5 அல்லது 10. இன்று மாலை தெரியவருமா?
vedhalam
அஜீத், ஸ்ருதிஹாசன் நடிப்பில் ‘வீரம்’ சிவா இயக்கியுள்ள ‘வேதாளம்’ திரைப்படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இந்நிலையில் இந்த படம் இன்று சென்சார் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த வாரமே இந்த படம் சென்சாருக்கு விண்ணப்பம் செய்யப்பட்டதாகவும், சென்சார் அதிகாரிகள் திங்கட்கிழமை இந்த படத்தை பார்க்கவுள்ளதாக கூறியுள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இன்று ‘வேதாளம்’ திரைப்படம் சென்சார் செய்யப்பட்டவுடன் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளதாகவும், வியாழக்கிழமை செண்ட்மெண்ட் படி இந்த படம் நவம்பர் 5ல் வெளிவருமா? அல்லது தீபாவளி தினத்தில் வெளிவருமா? என்பது இன்று இரவு அல்லது நாளை தெரியவரும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தின் டிரைலர் வரும் 29ஆம் தேதி அதிகாலை 12.00 மணிக்கு வெளியாகும் என கூறப்படுகிறது. அஜீத், ஸ்ருதிஹாசன், லட்சுமிமேனன், கபீர்சிங், சூரி, தம்பிராமையா, ராகுல்தேவ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். அனிருத்தின் இந்த படம் உருவாகியுள்ளது

English Summary: Vedhalam release date officially announced tonight?

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *