எந்திரன் – துப்பாக்கிய தோற்கடித்த ‘வேதாளம்.
vedhalam
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத், அஜீத், ஸ்ருதிஹாசன் நடித்த ‘வேதாளம்’ திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இந்த படம் பல நகரங்களில் வெளியாகும் திரையரங்குகளின் எண்ணிக்கையை கேட்டு கோலிவுட் ஆச்சரியம் அடைந்துள்ளது. இதுவரை முன்பதிவு செய்யப்பட்ட தொகை மட்டுமே ரூ.20 கோடியை தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை எந்த தமிழ்ப்படமும் ரிலீஸ் ஆகாத அதிக எண்ணிக்கையில் இந்த படம் ரிலீஸ் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சேலத்தில் ‘வேதாளம்’ திரைப்படம் மொத்தம் 77 திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த படத்தின் சேலம் பகுதி விநியோகிஸ்தரான 7ஜி சிவா இதை உறுதிப்படுத்தியுள்ளார். இதற்கு முன் தமிழில் வெளியான பெரிய பட்ஜெட் படங்களான எந்திரன், துப்பாக்கி, சிங்கம் 2, என்னை அறிந்தால், லிங்கா ஆகிய படங்கள் ரிலீஸான திரையரங்குகளின் எண்ணிக்கையை விட இது அதிகமானது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே முன்பதிவிலேயே ரூ.20 கோடி வசூல் செய்து முடித்தவிட்ட இந்த படம் ரிலீஸான ஓரிரு நாட்களில் ரூ.100 கோடி வசூலை பெற்றுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *