shadow

‘வேதாளம்’ படத்தின் சென்சார் சர்டிபிகேட்டால் மகிழ்ச்சி அடைந்த ரசிகர்கள்
vedhalam
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத், ஸ்ருதிஹாசன் நடித்த ‘வேதாளம்’ படத்தை இன்று பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு ‘க்ளீன்’ யூ சர்டிபிகேட் கொடுத்துள்ளனர். மேலும் படத்தில் எந்தவிதமான கட்’டும் செய்யாமல் சென்சார் அதிகாரிகள் அனைத்து காட்சிகளையும் அனுமதித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த திரைப்படம் ‘யூ’ சர்டிபிகேட் பெற்றுள்ளதால், தமிழக அரசின் 30% வரிவிலக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமின்றி இந்த வரிச்சலுகை இனிமேல் படம் பார்க்கும் ரசிகர்களையும் போய்ச்சேரும் என்பதால் தயாரிப்பாளர் மட்டுமின்றி ரசிகர்களும் குஷியில் உள்ளனர்.

மேலும் ‘வேதாளம்’ திரைப்படம் ‘யூ’ சர்டிபிகேட் கிடைத்த ஒருசில நிமிடங்களில் படத்தின் ரிலீஸ் தேதியான ‘நவம்பர் 10 என்ற தேதியுடன் கூடிய போஸ்டர்களும் உடனே இணையத்தில் வெளியாகிவிட்டது. தீபாவளி தினத்தின் அஜீத்தின் படம் வெளியாவது இதன் மூலம் 100% உறுதியாகியுள்ளது.

Leave a Reply