மேடம் துசாட்ஸ் மியூசியத்தில் யோகா குரு பாபா ராம்தேவுக்கு மெழுகு சிலை

சர்வதேச அளவில் புகழ்பெற்ற மேடம் துசாட்ஸ் மெழுகு சிலை அருங்காட்சியகம் லண்டனில் அமைந்துள்ளது. இங்கு உலக நாடுகளில் பிரபலமானவர்களின் மெழுகு சிலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

அந்த வரிசையில், பிரபல யோகா குரு பாபா ராம்தேவின் மெழுகு சிலை இந்த அருங்காட்சியகத்தில் விரைவில் இடம் பெறவுள்ளது.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு லண்டன் சென்றுள்ள பாபா ராம்தேவ் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், யோகாவை உலகளவில் பிரபலப்படுத்தும் முயற்சியாக எனது மெழுகு சிலை நிறுவப்பட வேண்டும் என அவர்கள் கேட்டு கொண்டனர். ஆனால் நான் இதற்கு மறுப்பு தெரிவித்து வந்தேன்.

இங்கு சிலை நிறுவப்படுவதன் மூலம் பல்வேறு நாட்டினர் யோகாவின் பெருமைகளை அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும் என்பதால் சிலை அமைக்க ஒப்புக் கொண்டேன். இதையடுத்து, எனது மெழுகு சிலை விரைவில் அமையவுள்ளது என தெரிவித்தார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *