shadow

ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிடும் வசந்திதேவி பொதுவேட்பாளர் ஆவாரா?

vasanthi deviமக்கள் நல கூட்டணியில் திருமாவளவன் தலைமையிலான விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று 11 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று இரண்டு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதில் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து ஆர்.கே.நகர் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் சார்பில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் வசந்தி தேவி போட்டியிடுகிறார். விடுதலை சிறுத்தைகள் சார்பில் தான் போட்டியிட்டாலும் தான் ஒரு பொதுவேட்பாளர் என்றும் தனக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் வசந்திதேவி கேட்டுக்கொண்டுள்ளார். எனவே திமுக, அவருக்கு ஆதரவு அளிக்க அதன் வேட்பாளரை வாபஸ் பெற செய்யும் என கூறப்படுகிறது.

இன்னொரு வேட்பாளரான தொல்.திருமாவளவன் காட்டுமன்னார்கோவிலில் போட்டியிடுகிறார். மீதிமுள்ள 12 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் வெகுவிரைவில் அறிவிக்கப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தெரிவித்துள்ளன.

Leave a Reply