Chennai Today News

‘சர்கார்’ பட வீடியோவை வெளியிட்ட வரலட்சுமி

‘சர்கார்’ பட வீடியோவை வெளியிட்ட வரலட்சுமி

இளையதளபதி விஜய் நடித்து வரும் ‘சர்கார்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பின் இடையே எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை நடிகை வரலட்சுமி சமீபத்தில் தனது டுவிட்டரில் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில் தற்போது படப்பிடிப்பின் இடையே எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை வரலட்சுமி வெளியிட்டுள்ளார். இந்தவீடியோவில் காமெடி நடிகர் யோகிபாபு இதுவரை இல்லாத வகையில் ஒரு வித்தியாசமான கெட்டப்பில் உட்கார்ந்துள்ளார். கிட்டத்தட்ட கோமாளி கெட்டப்பில் இருக்கும் யோகிபாபுவின் கன்னத்தை ஒரு கை பிடித்து கிள்ளுவது போன்று இந்த வீடியோவில் உள்ளது.

இந்த வீடியோவை வெளியிட்டுள்ள வரலட்சுமி, யோகிபாபுவின் கன்னத்தை பிடிக்கும் அந்த கை யாருடையது என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். இதற்கு பலர் அது ‘விஜய்யின் கை என்று பதிலளித்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது ஃபேஸ்புக், டுவிட்டரில் வைரலாகி வருகிறது.

 

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!