வரலட்சுமியின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு

போடா போடி’ படம் மூலம் தமிழ்திரையுலகில் அறிமுகமான சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் மகள் வரலட்சுமி அதன் பின்னர் பல படங்களில் துறுதுறுப்பாஞ நடிப்பால் இளைஞர்களை கவர்ந்தார். குறிப்பாக பாலா இயக்கத்தில் அவர் நடித்த ‘தாரைதப்பட்டை’ படம் இவருக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது.

தற்போது வரலட்சுமி ‘மாரி-2’, ‘கன்னிராசி’, ‘பாம்பன்’, ‘ நீயா-2’, ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’, ‘மிஸ்டர் சந்திரமௌலி’, ‘ சண்டக்கோழி-2’ விஜய்யின் 62-வது படம் உள்ளிட்ட படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில், ‘வெல்வெட் நகரம்’ என்ற படத்திலும் நடிக்க அவர் ஒப்பந்தமாகி இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன

இந்த படத்தை அறிமுக இயக்குனர் மனோஜ் இயக்குகிறார். சைக்லாஜிக்கல் ஆக்‌ஷன் திரில்லர் படமாக உருவாகும் இந்த படம் கதாநாயகியை மையப்படுத்திய திரைக்கதை கொண்ட படமாகும். மேலும் சில ஆண்டுகளுக்கு முன் கொடைக்கானலில் நடந்த ஒரு நிஜ சம்பத்தை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார் பத்திரிகையாளர் கேரக்டரில் நடிப்பதாக கூறப்படுகிறது

varalakshmi new movie title is velvet nagaram

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *