shadow

அரசியல்வாதி ஆகிறார் சரத்குமார் மகள்

விஜய் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் ‘தளபதி 62’ படம் விவசாயம் கலந்த அரசியல் கதையாக உருவாகி வருகிறது.இந்த படத்தில் ராதாரவி, பழ.கருப்பையா ஆகியோர் அரசியல்வாதி கேரக்டர்களில் நடிக்கிறார்கள். இவர்களுடன் விஜய் புத்திசாலித்தனமாக மோதுவதாக திரைக்கதைஅமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தில் வரலட்சுமி ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். அவருடைய வேடம் என்ன என்பது பற்றிய தகவல் இப்போது வெளியாகி இருக்கிறது. அதன்படி, வரலட்சுமியும் அரசியல்வாதியாக நடிப்பதாக சொல்லப்படுகிறது.

தனுஷ் நடித்த ‘கொடி’ படத்தில் திரிஷா அரசியல்வாதியாக எதிரான வேடத்தில் நடித்தார். அதுபோலவே, வரலட்சுமிக்கும் இந்த படத்தில் எதிர்முனையில் மோதும் அரசியல்வாதி வேடம். இந்த பாத்திரத்தின் மூலம்தான் கதையில் அதிரடியான திருப்பங்கள் வருகின்றன. எனவே, வரலட்சுமி வேடம் இதில் மிகவும் முக்கியமானது என்று கூறப்படுகிறது.

Leave a Reply