தனுஷ் படத்தில் கலெக்டராக நடிக்கும் வரலட்சுமி

தனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகி வரும் `மாரி-2′ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கடந்த சிலநாட்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு தென்காசியில் நடந்த நிலையில், தற்போது அங்கு படப்பிடிப்பை முடித்துவிட்டு படக்குழு சென்னை திரும்பியுள்ளது.

இந்த படத்தில் தனுஷூக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்து வரும் நிலையில் இன்னொரு முக்கிய கேரக்டரில் வரலட்சுமி நடித்து வருவதாகவும், அவர் இந்த படத்தில் வில்லியாக நடிப்பதாக சில செய்திகள் உலா வந்தன. ஆனால் வரலட்சுமி இந்த படத்தில் கலெக்டராக நடிப்பதாக படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரபல மலையாள நடிகர் டோவினோ தாமஸ் வில்லனாகவும், நடிகர் கிருஷ்ணா முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *