கபடியை மையமாக வைத்து ‘வெண்ணிலா கபடிக்குழு’ திரைப்பட வெற்றியை அடுத்து கூடைப்பந்தை மையமாக வைத்து இந்த படம் வெளிவந்துள்ளது. கண்டிப்பாக இந்த விளையாட்டில் அறிவழகன் வெற்றி பெற்றுள்ளார் என்றுதான் சொல்லவேண்டும்.

படிப்பை விட கூடைப்பந்து விளையாட்டை உயிராக மதிக்கும் நாயகன் நகுலன், ஒரு கட்டத்தில் கூடைப்பந்து விளையாட்டால் தனது நண்பனை இழந்துவிட, இனிமேல் கூடைப்பந்து விளையாட்டு பக்கமே போகமாட்டென் என்று சபதம் செய்கிறார். ஆனால் நகுலனின் பயிற்சியாளர் ஆதி  ‘நீ என்னதான் கூடைப்பந்தை வெறுத்தாலும், நீ உண்மையிலேயே கூடைப்பந்தை நேசித்திருந்தால், அதுவே உன்னை தேடி வரும் என்று கூறுகிறார். அவர் கூறியபடியே நகுலனை தேடி வருகிறது கூடைப்பந்து. ஒரு நண்பனுக்காக கூடைப்பந்தை வெறுத்து ஒதுக்கிய நகுலன், வேறொரு நண்பனுக்காக மீண்டும் களம் இறங்குகிறார். இதன் நடுவே நாயகி மிருதுளாவின் மீது காதல், விளையாட்டு விரர்களை அடிமைகள் போல் நடத்தும் ஸ்பான்சர்கள், என எல்லாவற்றையும் அளவோடு திரைக்கதையில் நுழைத்திருக்கிறார் அறிவழகன்.

பாய்ஸ், காதலின் விழுந்தேன், போன்ற படங்களில் நடித்த நகுலனுக்கும் வல்லினம் நகுலனுக்கும் கொஞ்சம் கூட சம்மந்தமே இல்லை. நல்ல மெச்சூரிட்டி நடிப்பு. ஹீரோயிசம் இல்லாத, மிகைப்படுத்தப்படாத நடிப்பு என இவரை அளவோடு வேலை வாங்கிய இயக்குனருக்குத்தான் அனைத்து பாராட்டும்.

நாயகி மிருதுளா நடிப்பில் மட்டுமே முதிர்ச்சி தெரிகிறது. இவர் பேசும் காதல் வசனங்கள் எல்லாமே ரொம்ப முதிர்ச்சியானவை. இவ்வளவு மெச்சூரிட்டியான காதலர்கள் நிஜத்தில் இருப்பார்களா? என்பது சந்தேகம்தான்.

இன்றைய இளைஞர்கள் கிரிக்கெட்டுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை மற்ற விளையாட்டுக்கு கொடுக்கவில்லை என்பதை இயக்குனர் பல ஷாட்டுகளில் தனது கோபத்தை வெளிப்படுத்தியிருக்கி\றார். எஸ்.தமன் பாடல்களில் சொதப்பியிருந்தாலும், பின்னணி இசையில் பின்னி எடுத்துவிட்டார்.  இறுதியில் சச்சின், சானியா மிர்சா, விஸ்வநாதன் ஆனந்த போன்ற விளையாட்டில் சாதனை படைத்தவர்களை காட்டுவது இயக்குனர் மீது மரியாதையை கூட்டுகிறது என்றாலும் இந்த லிஸ்ட்டில் அஜீத்தை சேர்த்தது வெறும் விளம்பரத்திற்காகவா என்பதை அவர்தான் விளக்கவேண்டும்.

மொத்த்தத்தில் வல்லினம் வலிமையான திரைப்படம்தான்.

 

[embedplusvideo height=”300″ width=”500″ editlink=”http://bit.ly/1eoJ0qS” standard=”http://www.youtube.com/v/pNlNc93wsxo?fs=1″ vars=”ytid=pNlNc93wsxo&width=500&height=300&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep3609″ /]

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *