shadow

vpaரஜினிகாந்த், தீபிகா படுகோனே நடித்த கோச்சடையான் படத்தின் ரிலீஸ் திடீர் நிறுத்தத்தால், மே 16ஆம் தேதி ரிலீஸ் செய்ய வேண்டிய வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தை மே 10ஆம் தேதியே ரிலீஸ் செய்ய சந்தானம் முடிவு செய்தார். கதாநாயகனாக நடித்த முதல் படம் இது என்பதால் சந்தானம் இந்த படத்தை பெரிதும் எதிர்பார்த்திருந்தார். ஆனால் இன்று வெளியாவதாக இருந்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் சில தொழில்நுட்ப காரணங்களால் தாமதமாவதாக செய்திகள் தெரிவிக்கின்றன

பொதுவாக ஒரு படம் தியேட்டரில் ரிலீஸ் ஆவதற்கு முந்தைய நாள் அனைத்து தியேட்டர்களுக்கு அந்த படத்தின் Qube file அனுப்பி வைக்கப்படும். தியேட்டர் ஊழியர்கள் Qube file ல் இருந்து படத்தின் பிரதியை டவுண்லோடு செய்து படத்தை தியேட்டரில் ஒளிபரப்புவார்கள். ஆனால் இந்த படம் திடீரென ரிலீஸ் ஆனதால் Qube file சரியான நேரத்திற்கு அனைத்து தியேட்டர்களுக்கு சென்றடையவில்லை. ஒருசில மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் இன்று காலைதான் Qube file  வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் திரைப்படம் இன்று மாலை காட்சிகளில் இருந்தோ அல்லது நாளை முதல் ரிலீஸ் ஆகும் என தகவல்கள் கூறுகின்றன.

Leave a Reply