shadow

அதிமுகவில் இருந்து வைத்திலிங்கம் எம்பி நீக்கம்: தினகரன் அதிரடி

அதிமுகவின் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் நேற்று இணைந்துவிட்டதால் தற்போது ஒன்றுபட்ட அதிமுகவாக உள்ளது. இந்த நிலையில் அதிமுக அம்மா அணியில் இருந்து வைத்திலிங்கம் எம்பி நீக்கப்படுவதாக சற்றுமுன்னர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

நேற்றைய இணைப்பிற்கு பின்னர் சசிகலா கட்சியில் இருந்தும், பொதுச்செயலாளர் பதவியில் இருந்தும் நீக்கப்படுவார் என வைத்திலிங்கம் எம்பி தெரிவித்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

ஆனால் அதிமுக அம்மா அணியே தற்போது இல்லாத போது எப்படி அந்த அணியில் இருந்து ஒருவர் நீக்கப்பட முடியும் என்பதே பலரது கேள்வியாக உள்ளது.

Leave a Reply