shadow

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் தற்போது முன்னேறி வருவதாகவும் இன்று அல்லது நாளை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் சற்று முன் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

காவேரி மருத்துவமனை நிறுவனர் டாக்டர் அரவிந்தனிடம்
திரு ரஜினியின் நலம் கேட்டேன்.

நாளுக்கு நாள் அவர் நலம் கூடிவரும் நம்பிக்கைத் தகவல்கள்
என் நிம்மதியை மீட்டெடுத்தன.

உத்தமக் கலைஞனே

காற்றாய் மீண்டு வா
கலைவெளியை ஆண்டு வா

படையப்பா எழுந்து வா
பாட்ஷாபோல் நடந்து வா

வாழ்த்துகிறேன்.