shadow

வைகோ கருத்துக்கு திருமாவளவன் எதிர்ப்பு. மீண்டும் உடைகிறதா மக்கள் நலக்கூட்டணி?

thirumavalavanஎன்னுடைய ராஜதந்திரத்தால்தான் திமுக மீண்டும் ஆட்சிக்கு வரவில்லை என்று சமீபத்தில் வைகோ பேசியது மக்கள் நலக்கூட்டணியில் உள்ள தலைவர்களையே அதிருப்தி அடைய செய்துள்ளது. திமுக, அதிமுகவுக்கு மாற்று அணி என்று தேர்தலுக்கு முன்பும், பின்பும் கூறிக்கொண்டு தற்போது திமுகவுக்கு எதிராக மட்டும் வைகோ பேசிய இந்த கருத்து திருமாவளவன் உள்பட அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இதுகுறித்து கருத்து கூறிய திருமாவளவன், “சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளுக்கு மாற்றாகத்தான் மக்கள் நலக் கூட்டணியை பிரகடனப்படுத்தினோம். தி.மு.க, அ.தி.மு.கவுக்கு மாற்று என்ற கொள்கையை முன்வைத்து அரசியல் கூட்டணியாக நாங்கள் தேர்தலைச் சந்தித்தோம். ஆறு கட்சிகள் எங்களோடு இணைந்தன. இதில், ‘ தி.மு.கவை அழிக்க என்னுடைய ராஜதந்திரத்தைப் பயன்படுத்தினேன்’ என அவர் சொன்னது உண்மையாக இருந்தால், அது எந்த வகையிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குப் பொருந்தாது’ என்று கூறியுள்ளார்.

மக்கள் நலக்கூட்டணியில் இருந்து வெளியேறு திமுக பக்கமோ அல்லது மக்கள் நலக்கூட்டணியில் இருந்து வைகோவை வெளியேற்றவோ திருமாவளவன் முடிவு செய்திருப்பதாகவும் இதுகுறித்த தகவல் இன்னும் ஒருசில நாட்களில் தெரியும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே தேமுதிக, தமாக ஆகியவை மக்கள் நலக்கூட்டணியில் இருந்து பிரிந்துவிட்ட நிலையில் தற்போது மீண்டும் உடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

Leave a Reply