shadow

சிறையில் இருந்தபோது என்னை நானே ஆய்வு செய்து கொண்டேன். வைகோ

கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில், விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதாகவும் இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாகவும் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ மீது வழக்குப் பதியப்பட்டது. இந்த வழக்கில், எழும்பூர் நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி வைகோவுக்குச் சிறைத் தண்டனை விதித்தது. இந்த வழக்கில் வைகோ ஜாமீனில் செல்ல விரும்பாததால் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் 52 நாட்களுக்கு பின்னர் இன்று அவர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். அவர் சிறையில் இருப்பதால் அரசுக்கு வீண்செலவு ஏற்பட்டிருப்பதாகவும், அவரை சொந்த ஜாமீனில் வெளியே அனுப்பலாம் என்றும் நேற்று அரசு வழக்கறிஞர் வாதாடிய நிலையில் வைகோவுக்கு ஜாமீன் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் சற்று முன்னர் சிறையில் இருந்து வெளியே வந்த வைகோவுக்கு மதிமுகவினர் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். சிறை வாசலில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வைகோ கூறியபோது, ‘பழிவாங்கும் நோக்கத்திலேயே என் மீது வழக்கு தொடரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டேன். கட்சி நிர்வாகிகள் வற்புறுத்தியதால்தான் ஜாமீனில் வெளிவர ஒப்புக்கொண்டேன். மதுக்கடைக்கு எதிராக மக்கள் போராடி வருகின்றனர். அவர்களின் மக்களின் எழுச்சியை காவல்துறை அடக்கமுடியாது. 52 நாள்கள் சிறையில் இருந்தபோது என்னை நானே ஆய்வு செய்து கொண்டேன். அதிமுக அரசு ஓராண்டு காலத்துக்குள் பல்வேறு நெருக்கடிக்கு ஆளாகியிருக்கிறது. கல்வித்துறையில் அவர்கள் கொண்டு வந்துள்ள திட்டங்கள் சிறப்பாக உள்ளன’ என்று கூறினார்.

Leave a Reply