shadow

வைகோ மதிமுகவுக்கு மட்டும்தான் பொதுச்செயலாளர். சீறிய சிபிஎம் தொண்டர்கள்

vaikoதமிழகத்தில் நடைபெறவிருக்கும் மூன்று தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என மக்கள் நலக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ அறிவித்தது கம்யூனிஸ்ட் கட்சிகளை அதிருப்தி அடைய செய்துள்ளது.

வைகோவும் திருமாவளவனும் சொல்கிறபடி கட்சி நடத்த முடியாது என்றும், தேர்தலை புறக்கணிப்பது ஆளுங்கட்சிக்கு சாதகமான முடிவு எடுப்பது மட்டுமின்றி ஜனநாயக கடமையை ஆற்ற தவறுவது கூட என்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர்கள் கருத்து கூறியுள்ளனர். அதுமட்டுமின்றி வைகோ தன்னிச்சையாக முடிவெடுக்க அவர் மக்கள் நலக்கூட்டணியின் பொதுச்செயலாளர் இல்லை என்றும் அவர் மதிமுகவுக்கு மட்டும்தான் பொதுச்செயலாளர் என்றும் கூறியுள்ளனர்.

குறிப்பாக தஞ்சை தொகுதி சி.பி.ஐ கட்சிக்கு செல்வாக்கு உள்ள பகுதி என்றும் அதுபோல், திருப்பரங்குன்றம் சி.பி.ஐ.எம்-க்கு செல்வாக்கு உள்ள பகுதி என்றும் அந்தப் பகுதிகளில் போட்டியிட்டால், வெற்றி கிடைக்கவில்லை என்றாலும், கௌரவமான வாக்குகளைப் பெறலாம் என்று இரு கம்யூனிஸ்ட் கட்சிகளின் தொண்டர்கள் கருத்தாக இருந்தது. ஆனால் மூன்று தொகுதிகளிலும் போட்டியிடவில்லை என்ற முடிவு இரண்டு கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழுவில், ‘இப்போது இடைத் தேர்தலில் போட்டியிட நாம் பிடிவாதமாக இருந்தால், உள்ளாட்சித் தேர்தலை மக்கள் நலக்கூட்டணியாக இணைந்து சந்திக்க முடியாது. அதனால், இதில் வைகோவின் முடிவை ஏற்றுக் கொள்வோம்’ என்று சமாதானம் ஆகியுள்ளனர்.

Leave a Reply