shadow

vaiko

 

தேர்தல் நேரத்தில் பல்வேறு கொள்கைகள் கொண்ட கட்சிகள் கூட்டணி அமைப்பது இயல்புதான். அதற்காக கூட்டணிக்காக கொள்கைகளை விட்டுக்கொடுத்துவிடுவோம் என்ற பேச்சுக்கே இடமில்லை.

பாரதிய ஜனதா கட்சிக்கு தமிழ் ஈழம் அமைப்பது குறித்து உடன்பாடு இல்லை; ஆனால் அதே நேரத்தில் பாரதிய ஜனதாவின் பொது சிவில் சட்டம் என்ற கோட்பாட்டை மதிமுக ஏற்றுக்கொள்ளவில்லை. நாங்கள் எப்போதும் தனி ஈழம் என்பதில் உறுதியாக இருப்போம்.

சமீபத்தில் வெங்கையா நாயுடு தனி ஈழம் அமைப்பதில் பாரதிய ஜனதா உடன்பாடு இல்லை என்று கூறியிருந்தார். பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியில் இருக்கும் மதிமுக, இதுகுறித்து எவ்வித கருத்தும் கூறாமல் இருப்பது ஏன் என ஃபேஸ்புக், மற்றும் டுவிட்டர் இணையதளங்களில் வைகோவுக்கு பலர் கேள்வி மேல் கேட்டனர். அதன்பிறகே இந்த விளக்கத்தை வைகோ கொடுத்துள்ளார்.

எந்த ஒரு விஷயத்திற்கும் உடனுக்குடன் பதில்கூறும் வைகோ, இவ்வளவு முக்கியமான கருத்துக்கு பதில் கூற மூன்று நாள் எடுத்துக்கொண்டது ஏன் என கேள்வி எழும்பியுள்ளது. அதுமட்டுமின்றி ஓட்டுக்காக வைகோ தன் கொள்கைகளை தளர்த்தி கொண்டதாகவும் விமர்சிக்கப்படுகிறது.

Leave a Reply