shadow

vaikoஐந்து தமிழக மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதற்கு நரேந்திர மோடி அரசு தான் காரணம் என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழக மீனவர்கள் 5 பேருக்கு இலங்கை நீதிமன்றம் விதித்த தூக்குத்  தண்டனையை ரத்து, விடுதலைப்புலிகள்  மீதான தடை ரத்து, பால் விலை ஏற்றம் ரத்து ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து  ம.தி.மு.க சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் இன்று மாபெரும் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமை ஏற்றார். இந்த போராட்டத்தில், ஒழியட்டும், ஒழியட்டும் தூக்குத் தண்டனை ஒழியட்டும் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன. போராட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, தமிழகத்தில் பால் விலை உயர்வால் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

5 மீனவர்களின் தூக்குத் தண்டனைக்கு மத்திய அரசே காரணம். மோடி அரசின் தவறான அணுகுமுறைதான் காரணம். இனப்படுகொலை செய்த கொலைகாரன் ராஜபக்சேக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்த மானங்கெட்ட அரசுதான் இந்த மோடி அரசு. இனப்படுகொலை செய்த கொலைகாரனுக்கு இங்கே ஒருவர் பாரத ரத்னா கொடுக்க வேண்டும் என்கிறார். இவ்வாறு வைகோ ஆவேசமாக பேசினார்.

Leave a Reply