சிம்புவும் அனிருத்தும் எவ்வளவு வக்கிரமானவர்கள் என்பதை உணரமுடிகிறது. வைகோ

vaikoஅனிருத் இசையமைப்பில் சிம்பு பாடியதாக கூறப்படும் பீப் பாடலுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் தற்போது அரசியல்வாதிகளும் தங்கள் கண்டனத்தை தெரிவிக்க தொடங்கிவிட்டனர். முதலாவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சிம்பு மற்றும் அனிருத்தின் உள்ளம் எவ்வளவு வக்கரித்துபோனது என்பதை இந்த பாடலால் உணர முடிகிறது என்றும் இருவர் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது, “நடிகர் சிம்புவும், இசை அமைப்பாளர் அனிருத்தும் இணைந்து பாடிய பாடல்  சமூக வலைதளங்களில் பரவியதும், பெண்கள் அமைப்புகள் பெரும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. பீப் சாங் என்று கூறப்படும் அதில் பெண்களை  ஆபாசமாகவும், கேவலமாகவும் சித்தரித்து உள்ளனர். இவர்களின் வக்கரித்துப்போன உள்ளம் எப்படிப்பட்டது என்பதை உணர முடிகிறது.

சென்னை மாநகரம் மழை வெள்ளத்தால் மூழ்கிப் போய் லட்சக்கணக்கான மக்கள் நாதியற்று நடுத்தெருவில் அலைந்து திரிந்த கொடுமை நேர்ந்த போது  சிம்பு, அனிருத் இருவரும் இந்த ஆபாசப் பாடலை உருவாக்கி இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். தமிழக அரசு இவர்கள் இருவர் மீதும் கடும்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு வைகோ வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

English Summary: Vaiko condemned to Anirudh and Simbu

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *