shadow

வைகோ வாகனம் மீது திமுக தொண்டர்கள் தாக்குதல். காவேரி மருத்துவமனை அருகே பரபரப்பு

திமுக தலைவர் கருணாநிதி சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இன்று காலை முதல் ராகுல்காந்தி உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அவரை நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தனர்.

இந்நிலையில் சற்று முன்னர் மதிமுக தலைவர் வைகோ, காவேரி மருத்துவமனைக்கு வந்தார். ஆனால் மருத்துவமனை முன் நின்றிருந்த திமுக தொண்டர்கள் வைகோ வெளியேற வேண்டும் என்று கோஷமிட்டனர்.

ஒருகட்டத்தில் திமுக தொண்டர்கள் உணர்ச்சிவசப்பட்டு வைகோவின் காரை தாக்க தொடங்கினர். இதனால் வைகோ, கருணாநிதியை பார்க்காமல் திரும்பி சென்றுவிட்டார்.

திமுக தொண்டர்கள் உணர்ச்சி வசப்பட்டு இவ்வாறு நடந்து கொண்டதாகவும் இதற்காக திமுக தலைமை சார்பில் வருத்தம் தெரிவித்து கொள்வதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply