shadow

6

பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி நடிகர் ரஜினிகாந்த்தை சந்தித்து பேசிவிட்டு சென்ற 24 மணி நேரங்களில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ரஜினிகாந்த்தை சந்தித்து பேசிய புகைப்படத்தை மதிமுக வெளியிட்டுள்ளது. ஆனால் இந்த சந்திப்பு கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்றது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த்தை அவரது வீட்டிற்கு சென்று மரியாதை நிமித்தமாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்தித்து பேசியதாகவும், அந்த சமயத்தில் 3 அப்பாவி தமிழர்களின் தூக்கு தண்டனையை நீக்க போராடிய ராம்ஜெத் மலானி, தன் கைப்பட எழுதிய மோடி ஆதரவு புத்தகத்தின் பிரதியை ரஜினியிடம் அவர் கொடுத்ததாகவும் மதிமுக செய்தி குறிப்பு கூறுகிறது.

ஏப்ரல் 6ஆம் தேதி சந்தித்த இந்த நிகழ்ச்சியின் புகைப்படங்களை 10 நாட்களாக வெளியிடாமல் மோடி ரஜினியை சந்தித்து விட்டு சென்ற மறுநாள் வெளியிட்டது ஏன் என்பது குறித்து மதிமுகவிடம் இருந்து எவ்வித விளக்கமும் கொடுக்கப்படவில்லை.

மேலும் ரஜினி பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய மாட்டார் என்றும், அவர் இந்த தேர்தலில் நடுநிலை வகிக்க இருப்பதாகவும், அவரது வட்டாரங்கள் கூறுகின்றன.

6a

Leave a Reply