shadow

Vadacurry-moviepreview_m5தயாநிதி அழகிரியின் தயாரிப்பு, சன்னிலியோன் குத்துப்பாட்டு, சுப்பிரமணியபுரம் படத்தின் வெற்றி ஜோடி நடித்த திரைப்படம் என பலத்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய படம் வடகறி. ஆனால் சமைத்த விதம் சரியில்லாததால் படு சொதப்பலாக உள்ளது.

ஜெய் ஒரு மருந்து கம்பெனியில் ரெப் ஆக வேலை பார்க்கிறார். காஸ்ட்லியான ஐபோன் இருந்தால்தான் காதலிக்க முடியும் என நண்பன் பாலாஜியின் ஐடியாவை கேட்டு ஒரு புதிய போன் வாங்க முயற்சிக்கும்போது ஒரு ஐபோன் இவர் கையில் சிக்குகிறது. இந்த ஐபோனுக்கு சொந்தமானவன் ஒரு பெரிய மோசடி பேர்வழி. காலாவதியான மருந்துகளை தேதி மாற்றி விற்கும் கூட்டத்தை சேர்ந்தவன். இவனிடம் ஏமாந்த ஒருவர் ஜெய்க்கு போன் பண்ணி நைசாக வரவழைத்து, ஜெய்தான் மருந்துகளை மோசடி செய்தவன் என நினைத்து கடத்துகிறார். இந்த பிரச்சனையில் இருந்து எப்படி தப்பித்தார் என்பதுதான் கதை. இதற்கிடையில் ஜெய் -சுவாதி காதல், சன்னிலியோன் குத்துப்பாட்டு, ஆர்ஜே பாலாஜியின் காமெடி என கதை நகர்கிறது

ஜெய் நடிப்பில் சிறிது முன்னேற்றம் தெரிகிறது. எங்கேயும் எப்போதும் திரைப்படத்தில் அப்பாவியாக வந்த விஜய், இதில் காதல் மற்றும் ஆக்சன் காட்சிகளில் நன்றாக நடித்துள்ளார். தமிழ்த்திரையுலகில் கண்டிப்பாக முன்னேறி வரும் ஹீரோக்களில் ஒருவர்தாஜ் ஜெய் என்பதில் சந்தேகம் இல்லை.

சுவாதிக்கு பெரிதாக வேலை ஒன்றும் இல்லை. ஜெய்யுடன் காதல், மோதல், தோழிகளுடன் அரட்டை என போகிறது அவரது கேரக்டர்.

நண்பனாக வரும் ஆர்ஜே பாலாஜி, இன்னொரு சந்தானமாக வர வாய்ப்புள்ளது. எப்.எம் ரேடியோவில் சொல்லிய காமெடிகளை மீண்டும் சொல்லாமல் இருந்ததற்காக பாராட்டலாம்.

வெங்கட்பிரபுவிடம் உதவி இயக்குனராக இருந்த சரவணன் ராஜா பின்பாதியை விறுவிறுப்பாக கொண்டு சென்றுள்ளார். முதல்பாதியில் கொஞ்சம் திரைக்கதையில் கவனம் செலுத்தியிருக்கலாம். சன்னிலியோனின் குத்துப்பாட்டில் கவர்ச்சி தாராளம். இந்த படத்துக்கு எப்படி யூ சர்டிபிகேட் கொடுத்தார்கள் என்றே தெரியவில்லை.

வடகறியில் சுவை கம்மிதான்.

Leave a Reply