மேஷம்
புரட்சிகரமான சிந்தனையுடைய நீங்கள், தனக்கென துன்பம் வந்தாலும் கூட அடுத்தவர்களிடம் உதவி கேட்க தயங்குவீர்கள். சுக்ரன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் பிரபலங்களின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். சிலர் வீடு மாற வேண்டுமென முடிவெடுப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். மனைவி வழியில் உதவிகள் உண்டு. பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். செவ்வாய் 5 – ல் தொடர்வதால் மனைவியுடன் மோதல்கள், அவருக்கு மருத்துவச் செலவுகள் வந்துப் போகும். வீடு, மனை வாங்குவது, விற்பதில் இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம். சகோதர வகையில் சங்கடங்கள் வரும். சூரியன் நீசமாகி அமர்வதால் அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். அரசியல்வாதிகளே! சகாக்களைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். கன்னிப் பெண்களே! பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் மறைமுக போட்டிகள் இருக்கும். வாடிக்கையாளர்கள் விரும்பி வருவார்கள். உத்தியோகத்தில் உங்களின் போராட்டங்கள் மற்றவர்களுக்கு புரியவில்லையே என வருந்துவீர்கள். இழுபறி நிலைமாறி ஏற்றம் பெறும் வாரமிது. அதிர்ஷ்ட தேதிகள் : 22, 26, 27 அதிர்ஷ்ட எண்கள் : 2, 9 அதிர்ஷ்ட நிறங்கள் : வெள்ளை, பிங்க் அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

ரிஷபம்
காசுபணத்திற்காக விலைபோகாத நீங்கள், கொள்கை, கோட்பாடுகளுடன் வாழ்பவர்கள். ராகுவும், சனியும் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் சாதிக்க வேண்டுமென்ற துணிச்சல் வரும். ஷேர் மூலம் பணம் வரும். வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். மகளின் பிடிவாதம் தளரும். மகனுக்கு நீங்கள் எதிர்பார்த்ததைப் போல நல்ல குடும்பத்திலிருந்து பெண் அமையும். வீடு கட்ட சி. எம். டி. ஏ. , எம். எம். டி. ஏ அப்ரூவல் கிடைக்கும். வழக்கில் திருப்பம் ஏற்படும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். சொத்துப் பிரச்னையில் நல்ல தீர்வு கிடைக்கும். சூரியன் 6 – ல் நீசமாகி அமர்ந்திருப்பதால் அவ்வப்போது பலவீனமாக இருப்பதாக நினைப்பீர்கள். முதுகுக்குப் பின்னால் விமர்சிப்பவர்களை பற்றி கவலைப்படாதீர்கள். சிறுசிறு அவமானங்கள் ஏற்படக்கூடும். நண்பர்களின் சுயரூபம் தெரிய வரும். அரசியல்வாதிகளே! கோஷ்டி பூசலில் ஆர்வம் காட்டாதீர்கள். கன்னிப் பெண்களே! நல்லவர்களின் நட்பு கிடைக்கும். கூடுதல் மொழி கற்றுக் கொள்ள முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். வேலையாட்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். உத்தியோகத்தில் சவால்களை சந்திக்க வேண்டி வரும். சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறும் வாரமிது. அதிர்ஷ்ட தேதிகள் : 24, 25, 26 அதிர்ஷ்ட எண்கள் : 3, 5 அதிர்ஷ்ட நிறங்கள் : மெரூண், பச்சை அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

மிதுனம்
ஈரப் பார்வையால் எல்லோரையும் தன் வசம் ஈர்க்கும் நீங்கள் எப்போதும் இதயத்திலிருந்து பேசுவீர்கள். கேதுவும், செவ்வாயும் சாதகமாக இருப்பதால் உங்களிடம் இருக்கும் சின்ன சின்ன பலவீனங்களை மாற்றிக் கொள்ள வேண்டுமென்ற முடிவுக்கு வருவீர்கள். தைரியம் கூடும். பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். சகோதரிக்கு நிச்சயமாகும். கோவில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். நகர எல்லையைத் தாண்டி வீட்டு மனை வாங்குவீர்கள். ஹிந்தி, தெலுங்குப் பேசுபவர்களால் ஆதாயமடைவீர்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். சூரியன் சாதகமாக இல்லாததால் அரசாங்க அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். யாரிடமும் உணர்ச்சிவசப்பட்டு பேச வேண்டாம். அரசியல்வாதிகளே! கட்சி தலைமையால் அலைக்கழிக்கப்படுவீர்கள். கன்னிப் பெண்களே! உங்களின் தனித்திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் உங்களிடமிருந்து தொழில்யுக்திகளை கற்றுக்கொள்வார்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகளைப் பற்றி சக ஊழியர்களிடம் பேசிக் கொண்டிருக்க வேண்டாம். சகிப்புத் தன்மையால் சாதிக்கும் வாரமிது. அதிர்ஷ்ட தேதிகள் : 21, 23, 27 அதிர்ஷ்ட எண்கள் : 1, 4 அதிர்ஷ்ட நிறங்கள் : பிஸ்தாபச்சை, நீலம் அதிர்ஷ்ட திசை : மேற்கு

கடகம்
வாழ்க்கை வாழ்வதற்கே என்பதை அறிந்த நீங்கள், ஏமாற்றங்கள், அவமானங்களை கண்டு அஞ்சமாட்டீர்கள். சுக்ரன் சாதகமாக இருப்பதால் யதார்த்தமாகப் பேசிக் கவர்வீர்கள். தெளிவாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சுபச் செலவுகள் அதிகரிக்கும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய உதவிகள் கிடைக்கும். சகோதர வகையில் நன்மை உண்டு. அரசால் அனுகூலம் உண்டு. குரு 12 – ல் மறைந்திருப்பதால் அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். விலை உயர்ந்த நகை, பணத்தை கவனமாக கையாளுங்கள். அக்கம் – பக்கம் வீட்டாருடன் சச்சரவுகள் வரக்கூடும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். அரசியல்வாதிகளே! கட்சி ரகசியங்களை வெளியில் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். கன்னிப் பெண்களே! பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகளிடம் நெருக்கமும் வேண்டாம், பகையும் வேண்டாம். திட்டமிடுதல் மூலம் சாதிக்கும் வாரமிது. அதிர்ஷ்ட தேதிகள் : 21, 22, 24 அதிர்ஷ்ட எண்கள் : 6, 8 அதிர்ஷ்ட நிறங்கள் : இளம்சிவப்பு, ஊதா அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

சிம்மம்
தர்மத்தை தலையாய் காக்கும் நீங்கள், எதையும் முகத்துக்கு நேரே பேசிவிடுவீர்கள். குருபகவான் வலுவாக இருப்பதால் சவாலான விஷயங்களையும் சாமர்த்தியமாக முடிப்பீர்கள். எதிர்பாராத வகையில் பணம் வரும். குடும்பத்தில் அமைதி நிலவும். கல்வியாளர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். நேர்முகத் தேர்வில் வெற்றிப் பெற்று புது வேலையில் அமருவீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனின் அலட்சியப் போக்கு மாறும். சகோதர வகையில் மதிப்புக் கூடும். பூர்வீக சொத்து கைக்கு வரும். வழக்கு சாதகமாகும். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். அயல்நாட்டிலிருப்பவர்களால் உதவிகள் கிடைக்கும். அரசு காரியங்கள் தள்ளிப் போய் முடியும். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். அரசியல்வாதிகளே! கட்சி மேல்மட்டத்தின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். கன்னிப் பெண்களே! சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். வியாபாரத்தில் தேங்கிக் கிடந்த சரக்குகளை குறைந்த லாபத்திற்கு விற்றுத் தீர்ப்பீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பார்கள். வெற்றிக் கனியை பறிக்கும் வாரமிது. அதிர்ஷ்ட தேதிகள் : 21, 23, 25 அதிர்ஷ்ட எண்கள் : 1, 4 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, க்ரீம்வெள்ளை அதிர்ஷ்ட திசை : கிழக்கு

கன்னி
பொதுவாக அமைதியை விரும்பும் நீங்கள், தர்க்கம் என வந்து விட்டால் இடியாக முழங்குவீர்கள். சுக்ரன் சாதகமாக இருப்பதால் நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். மனைவிவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணம் வந்தாலும் ஏழரைச் சனி தொடர்வதால் வெளியில் கடன் வாங்க வேண்டி வரும். சர்ப்ப கிரகங்களின் சஞ்சாரமும் சரியில்லாததால் ஈகோ பிரச்னை, மனஇறுக்கம், சின்ன சின்ன போராட்டங்கள் வந்துச் செல்லும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். வாகனத்தில் செல்லும் போது தவறாமல் தலைக்கவசம் அணிந்துச் செல்லுங்கள். வழக்கில் வழக்கறிஞரை கலந்தாலோசிப்பது நல்லது. அரசு காரியங்கள் தாமதமாக முடியும். உடல் அசதி, சோர்வு, உறவினர், நண்பர்களுடன் நெருடல்கள் வந்து நீங்கும். பூர்வீக சொத்துப் பிரச்னை வெடிக்கும். அரசியல்வாதிகளே! வீண் பேச்சில் காலம் கழிக்காமல் செயலில் ஆர்வம் காட்டுவது நல்லது. கன்னிப் பெண்களே! காதல் மற்றும் உயர்கல்வி சம்பந்தப்பட்ட குழப்பங்கள் நீங்கும். வியாபாரத்தில் லாபம் குறைவாக வருவதற்கான காரணத்தை கண்டறிந்து நீக்குவீர்கள். வேலையாட்களிடம் கறாராக இருக்க வேண்டாம். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் வெற்றி பெறும் வாரமிது. அதிர்ஷ்ட தேதிகள் : 22, 23, 24 அதிர்ஷ்ட எண்கள் : 3, 7 அதிர்ஷ்ட நிறங்கள் : சில்வர்கிரே, பச்சை அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

துலாம்
ரசிப்புத் தன்மை அதிகம் கொண்ட நீங்கள் எதையும் கலைநயத்துடன் செய்யக்கூடியவர்கள். குருவும், செவ்வாயும் சாதகமாக இருப்பதால் தொட்ட காரியங்கள் துலங்கும். உங்களைப் பற்றிய இமேஜ் ஒருபடி உயரும். திருமணம், சீமந்தம் போன்ற நிகழ்ச்சிகளையெல்லாம் முன்னின்று நடத்துவீர்கள். உறவினர், நண்பர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். எதிர்பார்த்திருந்த தொகை வந்து சேரும். ஆனாலும் ஜென்மச் சனி இருப்பதால் மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். வாயுத் தொந்தரவால் நெஞ்சு வலிக்கும். திடீர் செலவுகளும், பயணங்களும் அதிகரிக்கும். வாகனத்தை மாற்றுவீர்கள். புது வேலைக் கிடைக்கும். வெளிநாட்டிலிருப்பவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். மனைவிவழி உறவினர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். அரசியல்வாதிகளே! தகுந்த ஆதாரமின்றி எதிர்கட்சியினரை தாக்கி பேச வேண்டாம். கன்னிப் பெண்களே! நிஜம் எது, நிழல் என்பதை தெளிவாக உணர்வீர்கள். காதல் குழப்பங்கள் நீங்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்தியோகத்தில் நெருக்கடி தந்த அதிகாரி வேறு இடத்திற்கு மாற்றப்படுவார். எதிர்பாராத திடீர் நன்மைகள் சூழும் வாரமிது. அதிர்ஷ்ட தேதிகள் : 24, 26, 27 அதிர்ஷ்ட எண்கள் : 4, 9 அதிர்ஷ்ட நிறங்கள் : மஞ்சள், பழுப்பு அதிர்ஷ்ட திசை : தெற்கு

விருச்சிகம்
அழுத்தமாகவும், ஆணித்தரமாகவும் வாதாடும் நீங்கள், நியாயத்திற்கு கட்டுப்படுவீர்கள். ராசிக்கு 6 – ல் கேது சாதகமாக இருப்பதால் எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தையும் தந்து முடிப்பீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். வி. ஐ. பிகளும் அறிமுகமாவார்கள். பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். மகளுக்கு வரன் அமையும். செவ்வாய் சாதகமாக இருப்பதால் தைரியமாக, தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வீடு, மனை வாங்குவீர்கள். சொத்து விற்பது லாபகரமாக முடியும். வழக்குகள் சாதகமாகும். உயர்ரக ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். சூரியன் வலுவிழந்திருப்பதால் தந்தையாருக்கு மருத்துவச் செலவுகளும், அவருடன் மனத்தாங்கலும் வந்து நீங்கும். அரசியல்வாதிகளே! நீங்கள் எதை செய்தாலும், எதை சொன்னாலும் அதில் குற்றம் கண்டு பிடிக்க சிலர் முயல்வார்கள். கன்னிப் பெண்களே! பெற்றோருக்கு சில ஆலோசனை வழங்குவீர்கள். வியாபாரத்தில் கமிஷன், புரோக்கரேஜ் வகைகளால் லாபம் வரும். நல்ல வேலையாட்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் நெருக்கடிகள் தந்தாலும் சக ஊழியர்கள் மதிப்பார்கள். தன்னம்பிக்கையால் வெல்லும் வாரமிது. அதிர்ஷ்ட தேதிகள் : 21, 22, 23 அதிர்ஷ்ட எண்கள் : 1, 5 அதிர்ஷ்ட நிறங்கள் : ஊதா, க்ரீம்வெள்ளை அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

தனுசு
பரந்த மனசு கொண்ட நீங்கள் எப்பொழுதும் கூட்டமாக வாழ ஆசைப்படுவீர்கள். முக்கிய கிரகங்கள் சாதகமாக இருப்பதால் உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். மகளின் பிடிவாத குணம் மாறும். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை அமையும். சிலர் வெளிநாடு சென்று வருவீர்கள். கோபம் குறையும். குழம்பிக் கொண்டிருந்த விஷயத்தில் தெளிவு பிறக்கும். சகோதர வகையில் இருந்த மனத்தாங்கல் நீங்கும். வீடு, மனை வாங்குவது விற்பதில் இருந்த தேக்க நிலை மாறும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். அரைக்குறையாக நின்ற கட்டிட வேலைகளைத் தொடங்குவீர்கள். விலை உயர்ந்த தங்க ஆபரணம் வாங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். அரசியல்வாதிகளே! கட்சியின் மூத்த உறுப்பினர்களைச் சந்தித்துப் பேசுவீர்கள். கன்னிப் பெண்களே! பெற்றோர் உங்களின் புது முயற்சிகளை ஆதரிப்பார்கள். காதல் கசந்து இனிக்கும். வியாபாரத்தில் விளம்பர யுக்திகளை கையாண்டு லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். கடின உழைப்பால் சாதித்துக் காட்டும் வாரமிது. அதிர்ஷ்ட தேதிகள் : 21, 23, 25 அதிர்ஷ்ட எண்கள் : 4, 7 அதிர்ஷ்ட நிறங்கள் : கிரே, மெரூண் அதிர்ஷ்ட திசை : வடக்கு

மகரம்
புரட்சியை விரும்பும் நீங்கள், பழமையில் புதுமையைப் புகுத்துவதில் வல்லவர்கள். உங்கள் ராசிநாதன் சனிபகவான் ராகுவுடன் நிற்பதால் யூரினரி இன்பெக்ஷன், அலர்ஜி, சளித் தொந்தரவு வந்து நீங்கும். மற்றவர்கள் உங்களை கடுமையாக விமர்சித்தாலும் அதை பெரிதுப்படுத்திக் கொள்ளாதீர்கள். ராசிக்கு 6 – ம் வீட்டில் குரு மறைந்திருப்பதால் செலவுகள் அதிகமாகும். ஆனால் சாதகமான நட்சத்திரத்தில் குரு செல்வதால் கணிசமாக பணவரவு அதிகமாகும். வேற்றுமொழிப் பேசுபவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். உங்கள் பிரபல யோகாதிபதி சுக்ரன் சாதகமாக இருப்பதால் ஆடை, ஆபரணங்கள் சேரும். வாகனம் வாங்குவீர்கள். வீட்டை விரிவுப்படுத்திக் கட்டுவீர்கள். மகனுக்கு நல்ல வாழ்க்கைத் துணை அமையும். அரசியல்வாதிகளே! சகாக்கள் உங்கள்மீது அதிருப்தியடைவார்கள். கன்னிப் பெண்களே! தடைப்பட்ட உயர்கல்வியை தொடர்வீர்கள். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிமுகப்படுத்துவீர்கள். வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்ளுங்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை இருந்தாலும் அதிகாரிகளின் ஆதரவு மனதிற்கு இதமாக இருக்கும். கோபத்தை அடக்குவதால் மகிழ்ச்சி பொங்கும் வாரமிது. அதிர்ஷ்ட தேதிகள் : 21, 25, 27 அதிர்ஷ்ட எண்கள் : 1, 5 அதிர்ஷ்ட நிறங்கள் : ரோஸ், மயில்நீலம் அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

கும்பம்
புத்திசாலித்தனமும், பொறுமையும் அதிகமுள்ள நீங்கள், கடமை தவறாதவர்கள். உங்கள் பிரபலயோகாதிபதியான சுக்ரன் வலுவாக நிற்பதால் தைரியம் கூடும். தடைகள் விலகும். மனைவியும் உங்களின் புது திட்டங்களுக்கு ஆதரவாக இருப்பார். வீடு, மனை உங்கள் ரசனைக் கேற்ப அமையும். வாகனத்தை சீர் செய்வீர்கள். பெற்றோருடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும். ராசிநாதன் சனி ராகுவுடன் சேர்ந்து பலவீனமாக இருப்பதால் சோர்வு, களைப்பு வந்து விலகும். திடீரென்று அறிமுகமாகுபவர்களை வீட்டிற்கு அழைத்து வர வேண்டாம். வி. ஐ. பிகள் அறிமுகமாவார்கள். பணப்பற்றாக்குறை அதிகமாகும். பழைய கடனை நினைத்து அவ்வப்போது அஞ்சுவீர்கள். மகனுக்கு வெளிநாட்டு நிறுவனத்தில் வேலை கிடைக்கும். மகளின் முன்கோபம் விலகும். அரசியல்வாதிகளே! உங்கள் கட்சித் தலைமையையும் செயற்கையாக புகழ்ந்துக் கெர்ணடிருக்க வேண்டாம். கன்னிப் பெண்களே! புதிய நண்பர்களின் வருகையால் மகிழ்யடைவீர்கள். வியாபாரத்தில் லாபம் இரட்டிப்பாகும். வெளிநாட்டவர், வேற்றுமொழிக்காரர்களால் புது ஒப்பந்தங்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் தொடர்ந்து உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். முற்போக்குச் சிந்தனையால் முன்னேறும் வாரமிது. அதிர்ஷ்ட தேதிகள் : 22, 24, 26 அதிர்ஷ்ட எண்கள் : 1, 2 அதிர்ஷ்ட நிறங்கள் : சில்வர், ஊதா அதிர்ஷ்ட திசை : தெற்கு

மீனம்
மற்றவர்களின் வெற்றிக்கு வித்திடும் நீங்கள் எளிமையாக வாழ்பவர்கள். செவ்வாய் 6 – ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் மனோபலம் அதிகரிக்கும். உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். சொத்து சேர்க்கை உண்டு. பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறைக் காட்டுவார்கள். தாய்வழி உறவினர்கள் மதிப்பார்கள். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். ராகுவும், சனியும் 8 – ல் நிற்பதால் கணவன் – மனைவிக்குள் அவ்வப்போது சண்டை, சச்சரவு, விபத்துகள், எதிலும் பிடிப்பற்றப் போக்கு, தர்ம சங்கடமான சூழல்கள், செலவுகள் வந்துச் செல்லும். சொந்த – பந்தங்களின் சுயரூபத்தை அறிந்துக் கொள்வீர்கள். அரசியல்வாதிகளே! சகாக்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். கன்னிப் பெண்களே! உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்களைப் பற்றி விமர்சித்தாலும் அனுசரித்துப் போங்கள். தன்னடக்கத்தால் தடைகளை தாண்டும் வாரமிது. அதிர்ஷ்ட தேதிகள் : 25, 26, 27 அதிர்ஷ்ட எண்கள் : 5, 9 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, பச்சை அதிர்ஷ்ட திசை : மேற்கு

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *