மேஷம்
தள்ளி நின்று வேடிக்கை பார்க்காமல் தவறுகளை திருத்துபவர்களே! ராசிநாதன் செவ்வாய் சாதகமாக இருப்பதால் எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை வரும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களில் முதல் மரியாதைக் கிடைக்கும். கட்டிட வேலைகளைத் தொடங்குவீர்கள். வங்கிக் கடன் உதவி கிட்டும். சகோதரிக்கு திருமணம் நிச்சயமாகும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். ராகுவும், சனியும் உங்களுக்கு சாதகமாக இல்லாததால் மனஇறுக்கம், முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம், பணப்பற்றாக்குறை வந்துச் செல்லும். யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். அரசியல்வாதிகளே! தொகுதி நிலவரங்களை உடனுக்குடன் மேலிடத்துக்கு கொண்டு செல்லுங்கள். கன்னிப் பெண்களே! வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் போராட்டங்கள் மற்றவர்களுக்கு புரியவில்லையே என வருந்துவீர்கள். அனுபவ அறிவை பயன்படுத்த வேண்டிய வாரமிது. அதிர்ஷ்ட தேதிகள் : 4, 6, 8 அதிர்ஷ்ட எண்கள் : 4, 9 அதிர்ஷ்ட நிறங்கள் : வெள்ளை, ரோஸ் அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

ரிஷபம்
பெரிய குறிக்கோளுடன் வாழ்பவர்களே! ராகுவும், சனியும் சாதகமான நட்சத்திரத்தில் செல்வதால் எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும் சமாளிக்கும் சக்தி கிடைக்கும். வெளிநாட்டிலிருக்கும் நண்பர்களால் உதவிகள் உண்டு. வேற்றுமதத்தவர்கள் நட்பால் உற்சாகமடைவீர்கள். சூரியன் 7 – ல் தொடர்வதால் கணவன் – மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, முதுகு, மூட்டு வலி வந்து நீங்கும். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். சொத்து வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து விலகும். வழக்கால் நெருக்கடிகள் வந்து நீங்கும். அரசு காரியங்கள் இழுபறியாகும். அநாவசியச் செலவுகளை தவிர்க்கப்பாருங்கள். செவ்வாய் சாதகமாக இல்லாததால் பிள்ளைகளை அவர்கள் போக்கிலேயே விட்டுப்பிடிப்பது நல்லது. பூர்வீக சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. அரசியல்வாதிகளே! சகாக்களைப் பற்றிக் குறைக் கூற வேண்டாம். கன்னிப் பெண்களே! கூடாபழக்க வழக்கம் உள்ள நண்பர்களிடமிருந்து விடுபடுவீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிக்க அதிகம் உழைக்க வேண்டி வரும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். புதிய பாதை தென்படும் வாரமிது. அதிர்ஷ்ட தேதிகள் : 2, 6, 7 அதிர்ஷ்ட எண்கள் : 2, 7 அதிர்ஷ்ட நிறங்கள் : வெளிர்நீலம், மெரூண் அதிர்ஷ்ட திசை : கிழக்கு

மிதுனம்
சலனப்படாமல் சங்கடங்களை எதிர்கொள்பவர்களே! சூரியன் வலுவாக 6 – ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் திடீர் யோகம் உண்டாகும். ஓரளவு பணப்புழக்கம் அதிகரிக்கும். கம்பீரமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். பிள்ளைகள் உங்கள் மனங்கோணாமல் நடந்து கொள்வார். பாதிபணம் தந்து முடிக்காமல் இருந்த சொத்தை மீதிப் பணம் தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள். சகோதரங்களால் பயனடைவீர்கள். கேது சுகத்தாரையில் நிற்பதால் வாழ்வின் சூட்சுமத்தை அறிவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும். சாதுக்கள் உதவுவார்கள். உங்களின் ஜென்ம ராசியிலேயே குரு சென்றுக் கொண்டிருப்பதால் சில நேரங்களில் மன அமைதியற்ற நிலை ஏற்படக்கூடும். ஓய்வின்றி உழைக்க வேண்டி வரும். அரசியல்வாதிகளே! கட்சி ரகசியங்களை மூத்த தலைவர் உங்களிடம் பகிர்ந்துக் கொள்வார். கன்னிப் பெண்களே! உங்கள் பலம், பலவீனத்தை உணர்ந்து செயல்படுவது நல்லது. வியாபார ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்து வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் மற்றவர்களை நம்பி எந்த பொறுப்புகளையும் ஒப்படைக்க வேண்டாம். மேலதிகாரி ஆதரிப்பார். சூழ்ச்சிகளை முறியடித்து முன்னேறும் வாரமிது. அதிர்ஷ்ட தேதிகள் : 2, 3, 5 அதிர்ஷ்ட எண்கள் : 5, 6 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆலிவ்பச்சை, ஊதா அதிர்ஷ்ட திசை : தெற்கு

கடகம்
பிறர் சுதந்திரத்தில் தலையிடாதவர்களே! செவ்வாய் சாதகமாக இருப்பதால் வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். பூர்வீக சொத்தில் உங்கள் ரசனைக் கேற்ப சில மாற்றம் செய்வீர்கள். தன்னிச்சையாக முடிவுகள் எடுப்பீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். கடன் பிரச்னைகள் ஒரு பக்கம் விரட்டினாலும் இங்கிதமாகப் பேசி வட்டியை தருவீர்கள். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். சனியும், ராகுவும் 4 – ம் வீட்டில் தொடர்வதால் எல்லோருக்கும் நல்லது செய்தாலும் கெட்ட பெயர்தானே மிஞ்சுகிறது என்றெல்லாம் ஆதங்கப்படுவீர்கள். மனைவி வழியில் உங்களை தவறாகப் புரிந்துக் கொள்வார்கள். அரசியல்வாதிகளே! பொதுக்கூட்டம், போராட்டங்களில் முன்னிலை வகிப்பீர்கள். கன்னிப் பெண்களே! கசந்த காதல் இனிக்கும். போலியாக பழகியவர்களிடமிருந்து ஒதுங்குவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். பழைய வேலையாட்கள் மீண்டும் பணியில் வந்து சேர்வார்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். இடை விடாத முயற்சியால் சாதித்துக் காட்டும் வாரமிது. அதிர்ஷ்ட தேதிகள் : 4, 6, 7 அதிர்ஷ்ட எண்கள் : 3, 6 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, சில்வர்கிரே அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

சிம்மம்
உண்மையை உரக்கச் சொல்பவர்களே! குரு வலுவாக இருப்பதால் தடைகள் பல வந்தாலும் தளராமல் சாதிக்க முற்படுவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். பழைய நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். பணப்பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும் என்றாலும் செவ்வாய் 2 – ல் நிற்பதால் முன்கோபம், பேச்சால் பிரச்னைகள் சகோதர வகையில் அலைச்சல் வந்து நீங்கும். சொத்துப் பிரச்னைகள் தலைத்தூக்கும். வாகனத்தில் செல்லும் போது தலைக்கவசம் அணிந்துச் செல்லுங்கள். சுக்ரன் 6 – ம் வீட்டில் நிற்பதால் வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் கணவன் – மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. மின்னணு, மின்சார சாதனங்கள் பழுதாகும். அரசியல்வாதிகளே! சகாக்கள் மத்தியில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். கன்னிப் பெண்களே! பெற்றோரின் ஆலோசனையின்றி எந்த முடிவும் எடுக்காதீர்கள். வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் காலை விடாதீர்கள். போட்டிகள் இருக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்காக பரிந்துப் பேசுவீர்கள். நிதானத்தால் நெருக்கடிகளை நீந்திக் கடக்கும் வாரமிது. அதிர்ஷ்ட தேதிகள் : 3, 5, 7 அதிர்ஷ்ட எண்கள் : 2, 5 அதிர்ஷ்ட நிறங்கள் : நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட திசை : வடக்கு

கன்னி
மன்னிக்கும் குணம் உள்ளவர்களே! சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால் எதிர்பார்த்த தொகை வராவிட்டாலும் எதிர்பாராத பணவரவு உண்டு. வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். பூர்வீக சொத்தில் மாற்றம் செய்வீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டு. பால்ய நண்பர்களை சந்தித்து மனம் விட்டு பேசுவீர்கள். செல்போன், ஏ. சி. , ஃப்ரிட்ஜ் போன்ற சாதனங்கள் வாங்குவீர்கள். குரு சாதகமாக இல்லாததால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். இதை முதலில் முடிப்பதா, அதை முதலில் முடிப்பதா என்ற ஒரு டென்ஷன் இருக்கும். திடீர் பயணங்கள் உண்டு. வீண் பழிச்சொல் வரக்கூடும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். வழக்கில் அலட்சியம் வேண்டாம். அரசியல்வாதிகளே! கட்சி மேலிடத்தில் இருந்து வந்த பூசல்கள் மறையும். சகாக்கள் உதவுவார்கள். கன்னிப் பெண்களே! உங்களின் புது முயற்சிகளை பெற்றோர் ஆதரிப்பார்கள். வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். சில நேரங்களில் உயரதிகாரி வெறுப்பாக பேசினாலும் காதில் வாங்கிக் கொள்ளாதீர்கள். வீரியத்தை விட்டு விட்டு காரியத்தில் கவனம் செலுத்த வேண்டிய வாரமிது. அதிர்ஷ்ட தேதிகள் : 2, 4, 6 அதிர்ஷ்ட எண்கள் : 2, 8 அதிர்ஷ்ட நிறங்கள் : ரோஸ், மயில்நீலம் அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

துலாம்
நாசூக்காக பேசத் தெரிந்தவர்களே! குரு உங்களுக்கு 9 – ம் வீட்டில் தொடர்வதால் எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் அதை எதிர்கொள்ளும் மனப்பக்குவம் இருக்கும். சமயோஜித புத்தியால் முக்கிய காரியங்களை முடிப்பீர்கள். பணவரவு ஓரளவு உண்டு. தந்தைவழியில் சில உதவிகள் கிடைக்கும். சூரியன் உங்கள் ராசிக்கு 2 – ல் நிற்பதால் பேச்சிலே கவனம் தேவை. நீங்கள் யதார்த்தமாக சிலவற்றை சொல்லப் போய் அதை ஒருசிலர் தவறாகப் புரிந்துக் கொள்வார்கள். லேசாக கண் வலி, பல் வலி வந்துப் போகும். சனியும், ராகுவும் உங்கள் ராசியிலேயே செல்வதால் அவ்வப்போது குடும்பத்தில் சலசலப்புகள் வரும். சின்ன சின்ன பிரச்னைகளையெல்லாம் பெரிதாக்க வேண்டாம். வீண் சந்தேகங்களை தவிர்க்கப்பாருங்கள். அரசியல்வாதிகளே! சகாக்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். கன்னிப் பெண்களே! காதல் இனிக்கும். கல்யாணம் கூடி வரும். வியாபாரம் மந்தமாக இருக்கும். கடன் பிரச்னைகள் தலைத்தூக்கும். உத்தியோகத்தில் இருந்து வந்த கெடுபிடிகள் குறையும். கூடுதல் சலுகைகள் கிடைக்கும். விவேகமான முடிவுகளால் வெற்றி பெறும் வாரமிது. அதிர்ஷ்ட தேதிகள் : 2, 3, 7 அதிர்ஷ்ட எண்கள் : 1, 8 அதிர்ஷ்ட நிறங்கள் : பிங்க், க்ரீம் வெள்ளை அதிர்ஷ்ட திசை : மேற்கு

விருச்சிகம்
விடாமுயற்சியும், விவேகமும் அதிகமுள்ளவர்களே! ராசிநாதன் செவ்வாய் லாப வீட்டில் தொடர்வதால் புது வேலைக்கு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு வேலைக் கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. சவால்களில் வெற்றி பெறுவீர்கள். எதிர்பார்த்த விலைக்கு மனையை விற்று புது வீடு வாங்குவீர்கள். சகோதரங்கள் ஆதரவாக இருப்பார்கள். வீடு கட்டும் பணி நிறைவடையும். கல்யாணப் பேச்சு வார்த்தை சுமூகமாகும். மகனுக்கு இருந்து வந்த கூடாப்பழக்க வழக்கங்கள் நீங்கும். புதன் சாதகமாக இருப்பதால் பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். பிள்ளைகளிடம் இருந்து வந்த பிடிவாதம் தளரும். அரசியல்வாதிகளே! எந்த கோஷ்டியிலும் சேராமல் நடுநிலையாக இருக்கப்பாருங்கள். கன்னிப் பெண்களே! பெற்றோர் உங்களின் உணர்வுகளை புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் அதிரடி லாபம் உண்டு. உங்களை நம்பி சிலர் முதலீடு செய்வார்கள். வேலையாட்களால் அலைக்கழிக்கப்படுவீர்கள். உத்தியோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். இடம், பொருள், ஏவல் அறிந்து காய் நகர்த்தி காரியம் சாதிக்கும் வாரமிது. அதிர்ஷ்ட தேதிகள் : 5, 6, 8 அதிர்ஷ்ட எண்கள் : 6, 9 அதிர்ஷ்ட நிறங்கள் : ப்ரவுன், பிஸ்தாபச்சை அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

தனுசு
தன்னலம் இல்லாமல் உதவி வாழ்பவர்களே! சுக்ரன் சாதகமாக இருப்பதால் அழகு, இளமைக் கூடும். சோர்வு, களைப்பு நீங்கும். சவாலான காரியங்களையும் சிறப்பாக முடிப்பீர்கள். கணவன் – மனைவிக்குள் இருந்த கருத்து மோதல்கள் விலகும். மனைவியுடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். பிள்ளைகளின் போக்கில் மாற்றம் உண்டாகும். மகனுக்கு நல்ல மணமகள் அமையும். வேலைக் கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. வாகனத்தை சீர் செய்வீர்கள். வீடு கட்டுவதற்கு வங்கிக் கடன் உதவி கிடைக்கும். சூரியன் சாதகமாக இல்லாததால் அரசு காரியங்களில் அலட்சியம் வேண்டாம். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். சில வேலைகளை இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி வரும். தொண்டை புகைச்சல், சளித் தொந்தரவு வந்து நீங்கும். செவ்வாய் சாதகமாக இருப்பதால் புறநகர் பகுதியில் வீட்டு மனை வாங்குவீர்கள். அரசியல்வாதிகளே! தலைமையிடம் சிலர் உங்களைப் பற்றி புகார் பட்டியல் வாசிப்பார்கள். கன்னிப் பெண்களே! சமயோஜித புத்தி அதிகரிக்கும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். அதிக கடன் யாருக்கும் தர வேண்டாம். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். எல்லா வகையிலும் ஏற்றம் தரும் வாரமிது. அதிர்ஷ்ட தேதிகள் : 2, 3, 7 அதிர்ஷ்ட எண்கள் : 2, 7 அதிர்ஷ்ட நிறங்கள் : மயில்நீலம், சிவப்பு அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

மகரம்
கலகலப்பாக பேசி காரியம் சாதிப்பவர்களே! உங்களின் பிரபல யோகாதிபதியான சுக்ரன் சாதகமான நட்சத்திரத்தில் செல்வதால் தடைகள் நீங்கும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கணவன் – மனைவிக்குள் நிலவி வந்த பனிப்போர் நீங்கும். வீண் சந்தேகத்தால் ஏற்பட்ட குழப்பங்களும் விலகும். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். எதிர்பார்த்திருந்த பணம் வரும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகன் பொறுப்பாக நடந்துக் கொள்வார். மனைவிவழி உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். புகழ் பெற்ற புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். வீண் விவாதங்களை நீங்களே தவிர்ப்பீர்கள். செவ்வாய் 9 – ம் வீட்டில் நிற்பதால் சகோதர வகையில் இருந்த மனக்கசப்பு நீங்கும். பழைய கடன் ஒன்றிலிருந்து விடுபடுவீர்கள். அரசியல்வாதிகளே! பரபரப்புடன் காணப்படுவீர்கள். கன்னிப் பெண்களே! புதிய நண்பர்களின் வருகையால் மகிழ்ச்சியடைவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னையும், பணத்தட்டுப்பாடும் வந்து நீங்கும். உத்தியோகத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். அதிகாரிகளுடன் சகிப்புத் தன்மையுடன் நடந்துக் கொள்வது நல்லது. போராட்டங்களை கடந்து புத்துயிர் பெறும் வாரமிது. அதிர்ஷ்ட தேதிகள் : 2, 4, 5 அதிர்ஷ்ட எண்கள் : 1, 3 அதிர்ஷ்ட நிறங்கள் : ரோஸ், ப்ரவுன் அதிர்ஷ்ட திசை : கிழக்கு

கும்பம்
பரந்த மனசுடன் அனைவரையும் நேசிப்பவர்களே! 10 – ம் வீட்டில் சூரியனும், புதனும் நிற்பதால் தன்னம்பிக்கை  உண்டாகும். அழகு, இளமைக் கூடும். தடைகள் உடைபடும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். தள்ளிப் போன திருமணம் கூடி வரும். அயல்நாடு செல்ல விசா வரும். அக்கம் – பக்கம் வீட்டாருடன் இருந்து வந்த மோதல்கள் விலகும். பழைய உறவினர், நண்பர்களை சந்திப்பீர்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும். செவ்வாய் 8 – ல் நிற்பதால் முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. அவசர முடிவுகள் வேண்டாம். சிலர் உங்களை தூண்டி விடுவார்கள். கொந்தளித்து வார்த்தைகளை கொட்டி விடாதீர்கள். ஒருவகையான எதிர்மறை எண்ணங்கள் உருவாகும். கணவன் – மனைவிக்குள் மனஸ்தாபங்கள் வரும். சின்ன சின்ன பிரச்னைகளெல்லாம் பெரிதாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அரசியல்வாதிகளே! சகாக்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கன்னிப் பெண்களே! பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் போட்டிகளால் லாபம் குறையும். உத்தியோகத்தில் சந்தித்து வந்த அவமானங்கள் நீங்கும். மேலதிகாரிக்கு நெருக்கமாவீர்கள். பொறுமையும், நிதானமும் தேவைப்படும் வாரமிது. அதிர்ஷ்ட தேதிகள் : 3, 5, 6 அதிர்ஷ்ட எண்கள் : 4, 5 அதிர்ஷ்ட நிறங்கள் : மெரூண், பிங்க் அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

மீனம்
சோர்ந்து வருபவர்களை தேற்றிவிடுபவர்களே! புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் மனைவிவழியில் உதவிகள் உண்டு. புது வேலை அமையும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனில் ஒருபகுதியை பைசல் செய்ய வழி கிடைக்கும். உறவினர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சுற்றுலா சென்று வருவீர்கள். தந்தைவழியில் இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். எதிர்வீட்டுக்காரருடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும். குரு சாதகமாக இல்லாததால் யாருக்காகவும் ஜாமீன், கேரண்டர் கையப்பமிட வேண்டாம். வங்கி சேமிப்புக் கணக்கில் இருப்புத் தொகையை சரி பார்த்து விட்டு பிறகு காசோலை தருவது நல்லது. அரசியல்வாதிகளே! ஆதாரமின்றி எதிர்கட்சியினரை விமர்சிக்க வேண்டாம். கன்னிப் பெண்களே! பெற்றோருக்கு சில ஆலோசனை தருவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். வேலையாட்களால், பிரச்னைகள் வந்து நீங்கும். உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிக்க வேண்டி வரும். சக ஊழியர்களை அரவணைத்துப் போங்கள். சின்ன சின்ன ஆசைகள் நிறைவேறும் வாரமிது. அதிர்ஷ்ட தேதிகள் : 2, 3, 7 அதிர்ஷ்ட எண்கள் : 6, 8 அதிர்ஷ்ட நிறங்கள் : வெள்ளை, பிஸ்தாபச்சை அதிர்ஷ்ட திசை : தெற்கு

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *