மேஷம்
தியாக உணர்வும், திடச்சிந்தனையும், சுயமரியாதையும் அதிகம் உடைய நீங்கள், சொந்த உழைப்பிலேயே வாழ விரும்புவீர்கள். சுக்ரனும், புதனும் சாதகமான நட்சத்திரத்தில் செல்வதால் சமயோஜித புத்தியால் எல்லாப் பிரச்னைகளையும் எளிதாக சமாளிக்கும் சக்தி கிடைக்கும். கௌரவப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். நாத்தனார் மதிப்பார். கண்டகச் சனி நடைபெறுவதால் மனஇறுக்கம், வீண் டென்ஷன், மனைவிக்கு மாதவிடாய் கோளாறு வந்து நீங்கும். அரசு காரியங்கள் இழுபறியாகும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலும் தாமதமாகி வரும். பிள்ளைகள் உங்களைப் புரிந்துக் கொள்ளாமல் நடந்துக் கொள்வார்கள். அவர்களுக்கு பொறுமையாக எடுத்துச் சொல்லுங்கள். வழக்கை நிதானமாக கையாளுங்கள். அரசியல்வாதிகளே! கட்சி மேல்மட்டத்தை பகைத்துக் கொள்ளாதீர்கள். கன்னிப் பெண்களே! புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்‌தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். விடாமுயற்சியால் வெற்றி பெறும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள்: 26, 27, 28 அதிஷ்ட எண்கள்: 2, 6 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன் அதிஷ்ட திசை: கிழக்கு

ரிஷபம்
எத்தனை முறை விழுந்தாலும் விடாமுயற்சியுடன் தடைபட்ட காரியங்களை செய்து முடிக்கும் நீங்கள், அஞ்சா நெஞ்சம் கொண்டவர்கள். ராகுவும், சனியும் 6-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் உங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவார்கள். பெரிய மனிதர்களின் நட்பால் சில விஷயங்களை சாதித்துக் காட்டுவீர்கள். வீட்டை விரிவுப்படுத்தி கட்டுவீர்கள். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். தெலுங்கு, கன்னட மொழிப் பேசுபவர்களால் உதவிகள் உண்டு. 27-ந் தேதி வரை புதன் 6-ல் மறைந்திருப்பதாலும், சூரியன் 7-ல் தொடர்வதாலும் ஆடம்பரச் செலவுகளை தவிர்க்கப்பாருங்கள். மனைவிக்கு முதுகு மற்றும் மூட்டு வலி வந்துச் செல்லும். பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டுப் பிடியுங்கள். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். உறவினர்களுடன் நெருடல்கள் வந்து நீங்கும். பழைய கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். அரசியல்வாதிகளே! சகாக்களுடன் உரிமையாகப் பேசி பெயரைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள். கன்னிப் பெண்களே! உங்களின் நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்‌தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். புதிய முயற்சிகளை முடித்துக் காட்டும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 28, 29, 30 அதிஷ்ட எண்கள்: 3, 5 அதிஷ்ட நிறங்கள்: பிங்க், ஆரஞ்சு அதிஷ்ட திசை: தென்மேற்கு

மிதுனம்
எதிரிக்கும் நல்லதே நினைக்கும் மாசற்ற மனசு கொண்ட நீங்கள், எப்போதுமே ஒற்றுமை உணர்வுக்கு உரமளிப்பவர்கள். சூரியன் 6-ம் வீட்டில் நிற்பதால் மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகி வரும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். புது பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். உங்களின் பெருந்தன்மையை எல்லோரும் புரிந்துக் கொள்வார். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். அண்டை வீட்டார் ஆதரவாக பேசுவார். மகளின் திருமணத்திற்காக வெளியில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். விலை உயர்ந்த சமையலறை சாதனங்கள் வாங்குவீர்கள். ஜென்ம குரு தொடர்வதால் கௌரவக் குறைவான சம்பவங்கள் நிகழ்ந்துவிடுமோ என்ற அச்சம் அடிமனதில் இருந்துக் கொண்டேயிருக்கும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த முயற்சிப்பார்கள். அரசியல்வாதிகளே! கட்சி மேல்ட்டத்தில் உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். கன்னிப் பெண்களே! உங்களுடைய அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். வியாபாரத்தில் புது யுக்திகளால் தேங்கிக் கிடந்த சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். உத்‌தியோகத்தில் இடமாற்றம் உண்டு. தைரியமான முடிவுகளால் புகழடையும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 25, 26, 28 அதிஷ்ட எண்கள்: 1, 8 அதிஷ்ட நிறங்கள்: சிவப்பு, பிஸ்தா பச்சை அதிஷ்ட திசை: வடகிழக்கு

கடகம்
உள்ளம் அழுதாலும் உதட்டால் சிரிக்கும் நீங்கள் தன் சொந்த சோகங்களை வெளியில் சொல்லிக் கொள்ளமாட்டீர்கள். புதன் சாதகமாக இருப்பதால் போராட்டங்களை சளைக்காமல் சமாளிக்கும் சக்தி கிடைக்கும். பூர்வீக சொத்தை விற்று சில பிரச்சனைகளிலிருந்து வெளி வருவீர்கள். உறவினர், நண்பர்களின் பாசமான விசாரிப்புகளால் ஆறுதல் கிடைக்கும். சுக்ரன் 6-ம் வீட்டில் மறைந்து நிற்பதால் கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். காய்ச்சல், தொண்டை வலி வந்து நீங்கும். வாகனத்தில் செல்லும் போது அலைப்பேசியை தவிர்ப்பது நல்லது. சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். செவ்வாய் 2-ல் தொடர்வதால் யதார்த்தமாக நீங்கள் பேசுவதைக் கூட சிலர் தவறாகப் புரிந்துக் கொள்வார்கள். உடன்பிறந்வர்களுடன் வாக்குவாதம் வந்து நீங்கும். அரசியல்வாதிகளே! நீங்கள் எதை செய்தாலும், எதை சொன்னாலும் அதில் குற்றம் கண்டு பிடிக்க சிலர் முயல்வார்கள். கன்னிப் பெண்களே! பெற்றோர் உங்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை சமாளிப்பீர்கள். வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்‌தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். நாவடக்கம் தேவைப்படும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 26, 28, 30 அதிஷ்ட எண்கள்: 4, 7 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், பழுப்பு அதிஷ்ட திசை: வடமேற்கு

சிம்மம்
வெளிப்படையாக பேசி அனைவரிடத்திலும் நற்பெயர் எடுக்கும் நீங்கள் பரபரப்பாக செயல்படக் கூடியவர்கள். ராசிநாதன் சூரியன் கேந்திரபலம் பெற்று நிற்பதால் மாறுபட்ட அணுகுமுறையால் வெற்றி பெறுவீர்கள். அரைக்குறையாக நின்ற கட்டிட வேலைகளை தொடங்குவீர்கள். வங்கி கடன் உதவி கிடைக்கும். அரசுக் காரியங்கள் சுலபமாக முடியும். குரு சாதகமாக இருப்பதால் செல்வாக்கு கூடும். கல்யாண விசேஷங்களில் முதல் மரியாதை கிடைக்கும். எதிரும், புதிருமாக இருந்த உறவினர்கள் தன் தவறை உணர்வார்கள். குழந்தை பாக்யம் கிட்டும். புது வேலை அமையும். புரோக்கரேஜ், ஷேர் வகைகளால் பணம் வரும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். கேதுவால் தூக்கமின்மை, கனவுத் தொல்லை, இரத்த சோகை வந்து நீங்கும். அரசியல்வாதிகளே! கட்சித் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். கன்னிப் பெண்களே! உங்கள் ரசனைக் கேற்ப நல்ல வரன் அமையும். வியாபாரம் சூடுபிடிக்கும். பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்‌தியோகத்தில் அதிகாரிகள் ஆச்சரியப்படும்படி சவாலான காரியங்களைக் கூட சிறப்பாக செய்து முடிப்பீர்கள். வசதி, வாய்ப்புகள் கூடும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 28, 29, 1 அதிஷ்ட எண்கள்: 6, 8 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, ப்ரவுன் அதிஷ்ட திசை: கிழக்கு

கன்னி
புரட்சிகரமாக சிந்தித்து செயல்படுவதில் வல்லவர்களான நீங்கள் புதுமையாகவும் சிந்திப்பீர்கள். ராசிநாதன் புதன் சாதகமாக இருப்பதால் நிர்வாகத் திறன் கூடும். பூர்வீக சொத்தை மாற்றியமைக்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். நட்பு வட்டம் விரியும். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. வி. ஐ. பிகள் உதவுவார்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டு. பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். செவ்வாய் 12-ல் மறைந்திருப்பதால் திடீர் பயணங்கள், வீண் செலவுகள், சகோதரங்களுடன் பனிப்போர் வந்து நீங்கும். சொத்துப் பிரச்சனைகள் தலைதூக்கும். வழக்கறிஞரை கலந்தாலோசித்து முடிவுகள் எடுப்பது நல்லது. ஏழரைச் சனி தொடர்வதால் நெருக்கமானவர்களிடம் கூட அந்தரங்க விஷயங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். அரசியல்வாதிகளே! கட்சி மேலிடம் உங்களை நம்பி சில போராட்டங்களுக்கு தலைமை தாங்க வைக்கும். கன்னிப் பெண்களே! உங்களின் தனித்திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து புது ஏஜென்ஸி எடுங்கள். உத்‌தியோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். தன்னம்பிக்கையால் முன்னேறும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 25, 26, 1 அதிஷ்ட எண்கள்: 1, 5 அதிஷ்ட நிறங்கள்: இளம்சிவப்பு, கிரே அதிஷ்ட திசை: தெற்கு

துலாம்
தடைக்கற்களை படிக்கட்டுகளாக மாற்றி பயணம் செய்யக் கூடிய நீங்கள், எதிரிக்கும் நல்லதே நினைப்பவர்கள். குருபகவான் உங்கள் ராசியைப் பார்த்துக் கொண்டிருப்பதால் தடுமாற்றம், தயக்கம் நீங்கி தைரியம் பிறக்கும். அழகு, இளமைக் கூடும். சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை அமையும். மகளுக்கு திருமணம் நிச்சயமாகும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வெள்ளிப் பொருட்கள் வாங்குவீர்கள். வெளியூர் பயணம் உண்டு. அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உங்கள் ராசியிலேயே ராகு தொடர்வதாலும், ஜென்ம சனி நீடிப்பதால் ஒற்றை தலை வலி, செரிமானக் கோளாறு, ஏமாற்றம், பிறர் மீது நம்பிக்கையின்மை வந்துச் செல்லும். அரசியல்வாதிகளே! வீண் பேச்சில் காலம் கழிக்காமல் செயலில் ஆர்வம் காட்டுவது நல்லது. கன்னிப் பெண்களே! பெற்றோருக்கு சில ஆலோசனை வழங்குவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்‌தியோகத்தில் மேலதிகாரி மதிப்பார் என்றாலும் சக ஊழியர்களால் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். ஆரோக்யத்தில் அக்கறை காட்ட வேண்டி வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 25, 26, 28 அதிஷ்ட எண்கள்: 3, 6 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, மயில்நீலம் அதிஷ்ட திசை: வடக்கு

விருச்சிகம்
செய்நன்றி மறவாத நீங்கள் காலம் வரும் போது திருப்பி செய்வதற்கு ஒரு போதும் தயங்கமாடீர்கள். சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால் மறைந்துக் கிடந்த திறமைகள் வெளிப்படும். குழப்பம் நீங்கி தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். வீட்டில் கூடுதலாக ஒரு தளம் அல்லது அறைக் கட்டுவீர்கள். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். சகோதர வகையில் உதவிகள் உண்டு. சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். அதிக வட்டிக் கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி பிறக்கும். ராசிக்குள் சூரியன் இருப்பதால் வேலைச்சுமை, முன்கோபம், மனஉளைச்சல், கர்பப்பை வலி வந்து நீங்கும். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். 8-ல் குரு நிற்பதால் வீண் பழி, தாழ்வுமனப்பான்மை, வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் வந்துப் போகும். அரசியல்வாதிகளே! கோஷ்டி சண்டையிலிருந்து ஒதுங்குங்கள். கன்னிப் பெண்களே! வேற்றுமதத்ததை சேர்ந்தவர்கள் தோழிகளாக அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை வசூலிப்பீர்கள். உத்‌தியோகத்தில் எதிர்ப்புகளை தாண்டி முன்னேறுவீர்கள். இழுபறி வேலைகள் முடியும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 26, 28, 29 அதிஷ்ட எண்கள்: 2, 5 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், சில்வர்கிரே அதிஷ்ட திசை: தென்மேற்கு

தனுசு
பொறுப்புகள் அதிகரித்தாலும், புகழின் உச்சிக்கு சென்றாலும் பழசை என்றும் மறக்காதவர்கள் நீங்கள் தான். செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால் மனவலிமை கூடும். தன் பலம் பலவீனத்தை உணருவீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளால் மதிப்புக் கூடும் என்றாலும் கேது 5-ல் தொடர்வதால் அவர்களால் சின்ன சின்ன ஏமாற்றங்களும் வந்து நீங்கும். சகோதரங்களால் பயனடைவீர்கள். சுக்ரன் சாதகமாக இருப்பதால் திருமண முயற்சிகள் பலிதமாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. பழைய சொத்து சம்பந்தப்பட்ட வழக்கு சாதகமாகும். வேலைத் தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். சூரியன் 12-ல் மறைந்திருப்பதால் அரசு காரியங்கள் சற்று தாமதமாக முடியும். தந்தைக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். அயல்நாட்டிலிருப்பவர்களால் நன்மை உண்டாகும். அரசியல்வாதிகளே! எந்த கோஷ்டியிலும் சேராமல் நடுநிலையாக இருக்கப்பாருங்கள். கன்னிப் பெண்களே! தவறான எண்ணங்களுடன் பழகியவர்களை ஒதுக்கித் தள்ளுவீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்‌தியோகத்தில் எல்லோரும் மதிப்பார்கள். வி. ஐ. பிகள் அறிமுகமாகும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 25, 26, 29 அதிஷ்ட எண்கள்: 5, 8 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, ஊதா அதிஷ்ட திசை: தென்கிழக்கு

மகரம்
தன்னலமின்றி பொது நலத்துடன் செயல்படும் நீங்கள் செய்நன்றி மறவாதவர்கள். சூரியன் வலுவாக அமர்ந்திருப்பதால் சவால்களில் வெற்றி பெறுவீர்கள். புது பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். எதிர்ப்புகள் அடங்கும். அரசால் ஆதாயம் உண்டு. சிலர் வீடு மாற வேண்டுமென்று நினைப்பீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த விசா கிடைக்கும். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். 29-ந் தேதி வரை செவ்வாய் 8-ல் நிற்பதால் குடும்பத்தில் சலசலப்பு, வீண் டென்ஷன், சொத்துப் பிரச்னை வந்துச் செல்லும். 30-ந் தேதி முதல் 9-ம் வீட்டில் நுழைவதால் கோபம் குறையும். 25, 26 மற்றும் 27-ந் தேதி மதியம் 1.30 மணி வரை யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். குரு 6-ல் மறைந்திருப்பதால் வீண் சந்தேகம், பழைய கடனை நினைத்த கவலைகள், எதிர்காலம் பற்றிய பயம் வந்து நீங்கும். அரசியல்வாதிகளே! சகாக்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். கன்னிப் பெண்களே! பெற்றோர் உங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வார்கள். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி முக்கிய பொறுப்பிகளை ஒப்படைக்காதீர்கள். உத்‌தியோகத்தில் அதிகாரிகளுடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். தாணுன்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 28, 30, 1 அதிஷ்ட எண்கள்: 4, 7 அதிஷ்ட நிறங்கள்: வைலெட், மஞ்சள் அதிஷ்ட திசை: மேற்கு

கும்பம்
கலகலப்பாக பேசும் நீங்கள் கடமைத் தவறாதவர்கள். ஊரே ஒரு குடையின் கீழ் கூடி நின்று எதிர்த்தாலும் கொள்கையை விட்டுக் கொடுக்க மாட்டீர்கள். கேதுவும், குருவும் வலுவாக இருப்பதால் எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். ஆன்மிக அறிஞர்கள், கல்வியாளர்களின் நட்பு கிடைக்கும். ஒரு சொத்தை விற்று மற்றொரு சொத்து வாங்குவீர்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை ஒருவழியாக தந்து முடிப்பீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். தூரத்து சொந்தங்கள் தேடி வருவார்கள். செவ்வாய் சாதகமாக இல்லாததால் கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். சகோதர வகையில் அலைச்சல் இருக்கும். சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். 27-ந் தேதி மதியம் 1. 30 மணி முதல் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் அலைச்சல் அதிகரிக்கும். அரசியல்வாதிகளே! கோஷ்டி பூசலையும் தாண்டி சாதிப்பீர்கள். கன்னிப்பெண்களே! காதல் விவகாரத்தில் தள்ளி இருங்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உத்‌தியோகத்தில் சின்ன சின்ன இடர்பாடுகளை சமாளிக்க வேண்டியிருக்கும். அந்தஸ்து ஒருபடி உயரும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 25, 26, 30 அதிஷ்ட எண்கள்: 2, 9 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, ஆரஞ்சு அதிஷ்ட திசை: கிழக்கு

மீனம்
கருணை உள்ளமும், கள்ளம் கபடம் இல்லாமல் உள்ளதையும், நல்லதையும் பேசும் குணமும் உடைய நீங்கள், முன் வைத்த காலை பின் வைக்காதவர்கள். 29-ந் தேதி வரை செவ்வாய் 6-ம் வீட்டில் நிற்பதால் எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். வீடு, மனை வாங்குவது, விற்பது சுலபமாக முடியும். பழுதான வண்டியை மாற்றுவீர்கள். சகோதர வகையில் அனுகூலம் உண்டு. பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். 8-ல் ராகுவும், சனியும் தொடர்வதால் அடிவயிற்றில் வலி, ஹார்மோன்கோளாறு, முன்கோபம் வந்துப் போகும். நண்பர்கள், உறவினர்கள் வகையில் சங்கடங்கள் வரும். பழைய கடன், பகை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். 30, 1 ஆகிய தேதிகளில் அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. கோஷ்டி பூசலையும் தாண்டி சாதிப்பீர்கள். அரசியல்வாதிகளே! தலைமையை பற்றி விமர்சனம் செய்து கொண்டிருக்காமல், தொகுதி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யப்பாருங்கள். கன்னிப் பெண்களே! பெற்றோரின் பேச்சுக்கு முக்கியத்துவமளியுங்கள். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்‌தியோகத்தில் சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். சவால்களில் வெற்றி பெறும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 25, 27, 29 அதிஷ்ட எண்கள்: 1, 9 அதிஷ்ட நிறங்கள்: சிவப்பு, வெளிர்நீலம் அதிஷ்ட திசை: வடக்கு

Leave a Reply