shadow

LRG_20150704112442225203

உத்திரகோசமங்கையில் உள்ள பிரம்ம தீர்த்த குளத்தின் சுற்றுச் சுவர்கள் இடிந்து சேதமடைந்து உள்ளன. இங்குள்ள மங்களநாத சுவாமி கோயிலுக்கு எதிரே 2 ஏக்கர் பரப்பளவில் பிரம்ம தீர்த்தக்குளம் உள்ளது. இதன் 4 பக்கங்களிலும் உள்ள சுற்றுச்சுவர்களில், தெற்குபகுதி சுவர் மட்டும் சேதமடைந்துள்ளது. அந்த இடத்தில் மண் சரிந்து குளத்திற்குள் தேங்கி கிடக்கிறது. குளத்து நீர் பச்சை நிறமாக மாறி உள்ளது.

இருகுறித்து அந்த ஊரைச் சேர்ந்த ராமன் கூறுகையில், “”சிவ பெருமானிடம் சாப விமோசனம் பெற்ற பிரம்மன், நீராடி பாவங்களை போக்கியதால், “பிரம்ம தீர்த்தக்குளம் என்ற பெயரில் புராண சிறப்பு பெற்று விளங்குகிறது. உற்சவ காலங்களில் மங்கள நாத சுவாமி கோயிலில் 11வது நாள் தீர்த்தவாரி பூஜைகள் இக்குளத்தில் தான் முன்பு நடந்தது. தற்போது குளம் மாசுபட்டு, பக்தர்கள் நீராட ஏற்றதாக இல்லை. மாவட்ட நிர்வாகம் இக்குளத்தை தூர்வாரி, சுற்றுச்சுவரை கட்டித்தர வேண்டும், என்றார்.

ஊராட்சித்தலைவர் ஆர்.நாகராஜன் கூறுகையில், “”சேதமடைந்த குளத்தின் சுற்றுச்சுவரை கட்ட ஊராட்சி சார்பில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதிக்கு காத்திருக்கிறது. ஒப்புதல் கிடைத்தவுடன் பணிகள் விரைவில் துவங்கும், என்றார்.

Leave a Reply