Kamal Haasan's Uthama Villain First Look Poster copyகமல்ஹாசனின் உத்தம வில்லன் கதை குறித்து தற்போது இணையத்தில் லீக் ஆகியுள்ளது. கமல்ஹாசன் இருவேடங்களிலும், அவருக்கு ஜோடியாக ஊர்வசி, மற்றும் ஆண்ட்ரியா நடிக்கின்றனர். கமல்ஹாசனை ஒருதலையாக காதலிக்கும் கேரக்டகளில் பூஜா குமார் மற்றும் பார்வதி மேனன் ஆகியோர் நடிக்கின்றனர்.

கமல்ஹாசன் 8ஆம் நூற்றாண்டை சேர்ந்த கூத்துக்கலைஞர் உத்தமனாகவும், 21ஆம் நூற்றாண்டை சேர்ந்த சூப்பர் ஸ்டார் மனோரஞ்சனாகவும் நடிக்கிறார். உத்தமனுக்கு ஜோடியாக ஊர்வசியும், மனோரஞ்சனுக்கு ஜோடியாக ஆண்ட்ரியாவும் நடிக்கின்றனர்.

உத்தமனை ஒருதலைபட்சமாக காதலிக்கும் இளவரசியாக பூஜாகுமாரும், பூஜாகுமாரின் தந்தையாகவும், அரசனாகவும், நாசர் நடிக்கிறார். ஜெயராம் மற்றொரு 21ஆம் நூற்றாண்டி நடிகராகவும், அவருடைய மகளாக பார்வதியும் நடிக்கின்றனர்.

நகைச்சுவை நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் சொக்கு செட்டியார் என்ற வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் இசை ஜிப்ரான், மற்றும் ஒளிப்பதிவு ஷ்யாம் தத் , எடிட்டிங் விஜய் ஷங்கர் மற்றும் இயக்கம் ரமேஷ் அரவிந்த் ஆகியோர் பணிபுரிகின்றனர்.

உத்தம வில்லன் படத்தின் கதை, கேரக்டர் முதல் இத்தனை விபரங்கள் எப்படி இணையத்தில் கசிந்துது என்று கமல் உள்பட படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.

Leave a Reply