2 ஆண்டுகளுக்கு முன் இறந்த வாலிபருக்கு பிறந்த இரட்டை குழந்தை. மருத்துவத்தின் மாயாஜாலம்

இரண்டு ஆண்டுகளுக்கு முன் புற்றுநோயால் இறந்த வாலிபர் ஒருவருக்கு ஆண், பெண் என இரட்டைக்குழந்தைகள் பிறந்த மருத்துவ மாயாஜாலம் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்துள்ளது.

மகாராஷ்ட்ர மாநிலத்தில் உள்ள புனே நகரை சேந்தவர் ராஜஸ்ரீ பாட்டீல் என்பவரது மகன் பிரதமேஷ் பாட்டீல் ஜெர்மனியில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென புற்றுநோயால் ஏற்பட அதற்காக அவர் சிகிச்சை மேற்கொண்டார். இருப்பினும் அவர் முன்னெச்சரிக்கையாக தனது விந்தணுவை பாதுகாப்பாக சேமித்து வைத்தார். இந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் பிரதமேஷ் பாட்டீல் மரணம் அடைந்தார்

மரணத்திற்கு முன் தனது மகன் விந்தணுவை சேமித்து வைத்ததை அறிந்த அவரது பெற்றோர்கள் அந்த சேமிக்கப்பட்ட விந்தணுவை கொண்டு தங்களுடைய வாரிசை பெற முயன்றனர். இதற்காக வாடகைத்தாய் ஒருவர் மூலம் சேமிக்கப்பட்ட விந்தணுவை கருவுற வைத்தனர்.

இந்த கரு இரட்டை குழந்தைகளாக வளர்ந்து கடந்த திங்கள் கிழமை ஆண், பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்தன. மகன் இல்லாத குறையை தீர்க்க பேரனும் பேத்தியும் வந்து சேர்ந்ததை கண்டு பிரதமேஷ் பெற்றோர்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளார் இந்த குழந்தைகள்ல் பிறக்க காரணமான மருத்துவர் சுப்ரியா புராணிக் அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *