shadow

ஈரானுடன் மீண்டும் ஒப்பந்தம் செய்ய தயார், ஆனால் கடுமையான நிபந்தனை இருக்கும்: டிரம்ப்

சமீபத்தில் ஈரானுடன் செய்து கொண்ட அணுசக்தி ஒப்பந்தம் ஒன்றில் இருந்து அமெரிக்கா விலகியது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தாறுமாறாக ஏறிக்கொண்டிருக்கும் நிலையில் ஈரானுடன் மீண்டும் ஒப்பந்தம் செய்து கொள்ள தயார் என்றும், ஆனால் அதற்கு கடுமையான நிபந்தனைகள் இருக்கும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் போம்பியோ கூறியபோது, ‘ஈரான் மீதான புதிய அமெரிக்க கொள்கையை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும், 12 கடுமையான நிபந்தனைகளுடன் ஈரான் உடன் எந்த ஒப்பந்தமும் செய்து கொள்ளவது போன்ற அம்சங்களும் அதில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஈரானுடன் மீண்டும் அணுசக்தி ஒப்பந்தத்தை அமெரிக்கா செய்து கொண்டால் கச்சா எண்ணெய்யின் விலை கட்டுக்குள் வரும் என்று சர்வதேச சந்தையை ஆய்வு செய்து வரும் வல்லுனர்கள் கூறியுள்ளனர்.

Leave a Reply