shadow

நாசா கட்டுப்பாட்டில் உள்ள ஆய்வகம் தனியாருக்கு விற்பனையா?

அமெரிக்காவின் நாசா கட்டுப்பாட்டில் உள்ள சர்வதேச விண்வெளி ஆய்வகம் தனியாருக்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

விண்ணில் உள்ள கோள்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக கட்டப்பட்டுள்ள விண்வெளி சர்வதேச ஆய்வகம் தற்போது பூமியின் சுற்றுவட்டப் பாதையில் சுற்றி வருகிறது. அமெரிக்கா, ரஷியா, கனடா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகள் இணைந்து உருவாக்கி உள்ள இந்த ஆய்வகத்தில் பல்வேறு வெளிநாட்டு விண்வெளி வீரர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆய்வகத்துக்காக அமெரிக்கா இதுவரை ரூ.6 லட்சத்து 50 ஆயிரம் கோடி அதாவது 100 பில்லியன் டாலர் செலவழித்து உள்ளது.

இந்நிலையில் இந்த விண்வெளி ஆய்வகத்தை தனியாருக்கு விற்க அமெரிக்கா முடிவு செய்துள்ளதாகவும், இதனை வாங்க பல தனியார் நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டிருப்பதாகவும் அமெரிக்க செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. ஆனால் இந்த விண்வெளி ஆய்வகத்தை வாங்கினால் தனியார் நிறுவனங்களுக்கு லாபம் கிடைக்குமா? என்பது குறித்து எந்த தகவலும் தெரியவில்லை. இது குறித்த அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என நாசா தெரிவித்துள்ளது.

Leave a Reply